ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு நடத்திய ரத்ததான முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு, கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஷார்ஜா அரசின் மருத்துவத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 29.03.2011 செவ்வாய்க்கிழமை நடத்தியது.

ரத்ததான முகாமினை இந்திய Buy Ampicillin Online No Prescription கன்சுலேட்டின் சமூக விவகாரத்துறை கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் ஸாக்ஸா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஷார்ஜா இந்திய வர்த்தக்குழு தலைவர் சுதேஷ் அகர்வால், கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் டாக்டர் சன்னி குரியன், இந்திய வர்த்தகக்குழுவின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் இந்திய வர்த்தக்குழு ரத்ததானம் மூலம் மேற்கொண்டுள்ள சமுதாயப் பணிகளைப் பாரட்டினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பங்கேற்று ஷார்ஜா பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாம்களில் அதிகமனோர் பங்கேற்ற முகாம் இது என தெரிவிக்கப்பட்டது.

இம்முகாமிற்கு டாக்டர் சன்னி மெடிக்கல் செண்டர், டிஃபனி, ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை ஆதரவளித்தன.

Add Comment