வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி : பீட்டர் அல்போன்ஸ் பெருமிதம்

“தேர்தல் நேரத்தில் தெரிவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி தரும் கூட்டணிதான் ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ என கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதி கிளாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:- “”சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இப்பகுதியில் தரைமட்டபாலமாக காணப்பட்ட கிளாங்காடு பாலத்தினை உயர்மட்ட பாலமாக சுமார் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தினை உயர்மட்ட பாலமாக மாற்றுவோம் என கடந்த தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளோம். கிளாங்காடு பஞ்., பகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை அளித்தால் மட்டும் போதாது. அதனை நிறைவேற்றக்கூடிய அரசுகள் அமைந்தால் தான் அதற்கான பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும். தற்போது திமுகவால் Buy Doxycycline அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மக்கள் நலன் காப்பவையாகும். திமுகவின் இலவச அறிவிப்புகளை காப்பியடித்து தேர்தல் அறிக்கையாக மாற்றுக் கட்சி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த அரசு அமைந்தால் இலவசங்கள் கிடைக்கும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் திமுக அரசின் மூலம் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலவச கலர் “டிவி’, காஸ் அடுப்பு, நலிந்தோர் நலத்திட்டங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அடுக்கி கொண்டே போகலாம். எனவே தமிழக மக்கள் அனைத்து திட்டங்களையும் பெற்றிடும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்திட ஆதரவினை தாருங்கள். இத்தொகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிடவும், மக்களுக்கான நலத்திட்ட பணிகள் கிடைத்திடவும் மீண்டும் அதற்கான வாய்ப்பினை எனக்கு தாருங்கள்” என்றார்.

Add Comment