கருத்து கணிப்பு சாதகமாக இருந்தால் பாராட்டுவார் : கருணாநிதி பற்றி செந்தூர் பாண்டியன் பேச்சு

: “சாதகமான கருத்துக்கணிப்பு இருந்தால் கருணாநிதி பாராட்டுவார், தனக்கு எதிராக கருத்துக்கணிப்பு இருந்தால் நம்ப வேண்டாம் என கூறுவார்’ என அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் புன்னையாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலிபட்டி, திரிகூடபுரம், குமந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு அவர் பேசியதாவது:- “”கடையநல்லூர் தொகுதியில் ஓட்டு கேட்க சென்ற இடத்தில் எல்லாம் குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தான் பொதுமக்கள் குறைகளாக கூறி வருகின்றனர். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளரான நான் வெற்றிபெற்றால் தொகுதி முழுவதும் சுகாதாரம் கொண்ட தொகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பேன். அனைத்து பகுதிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தருவேன். தொகுதியின் தலைமையிடமான கடையநல்லூரில் காணப்பட்டு வரும் சுகாதார கேட்டினை களைந்திட நடவடிக்கை எடுப்பேன். தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு ஆதரவாக அலை வீசி வருவதாக பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிவித்து வருகின்றன. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பார் என தமிழக மக்களும் உறுதிபட நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் கருத்துக்கணிப்பை நம்ப வேண்டாம் என கருணாநிதி கூறி வருகிறார்.

தங்களது கூட்டணிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டால் அதனை புகழாரம் சூட்டி மகிழ்வார். ஆனால் திமுகவிற்கு எதிராக கருத்துக்கணிப்பு வெளிவந்தால் அதனை நம்பவேண்டாம் என்பார். தன்னை புகழாரம் சூட்டுவதையே கருணாநிதி பெருமையாக கருதக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதன் மூலம் கடையநல்லூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்” என்றார்.

வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டிபாண்டியன், மாவட்ட துணை செயலார் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ நயினாமுகமது, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர்கள் நடராஜன், எல்ஐசி முருகையா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துபாண்டி,நகர செயலாளர் கிட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி Amoxil online பெருமையாபாண்டியன், மாவட்ட பேரவை இணை செயலாளர் வடகரை ரஜப், புதிய தமிழகம் ஆறுமுகசாமி, கவுன்சிலர்கள் கருப்பையா, முருகன், சுப்பையாபாண்டியன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Add Comment