லேப்டாப் வேண்டுமா ஆடு, மாடு வேண்டுமா : பிரசாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

தமிழக மக்களின் கல்வி முதலீட்டை அதிகப்படுத்தும் கம்ப்யூட்டர் லேப்டாப் வேண்டுமா? அதிமுக அறிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா? என வாக்காளர்கள் சிந்திக்க வேண்டுமென கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குமந்தாபுரம், மேலக்கடையநல்லூர், பண்பொழி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினரின் இருசக்கர வாகன அணிவகுப்போடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஓட்டு கேட்டு பேசியதாவது:- “”தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்போவது உறுதி. ஏழைகள் நலன் காக்கும் தேர்தல் அறிக்கையை திமுக தந்துள்ளது. இலவசமாக வழங்க கூடிய அரிசியின் கிலோ எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்துமே அறிவியல் தொழில்நுட்ப அம்சம் கொண்ட வாக்குறுதிகள் மட்டுமின்றி எதிர்கால சந்ததிகளின் கல்வி முதலீட்டை அதிகரிக்க கூடிய வாக்குறுதிகளாகவும் அமைந்துள்ளது. சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஏற்றி விடுகின்ற ஆட்சியாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அரசுகளும் கல்வியின் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஆண்டுக்கு ஆண்டு பல நூறு கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என நிதிகளை Amoxil No Prescription ஒதுக்கீடு செய்துள்ளன. மாணவ, மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையிலும் கம்ப்யூட்டர் லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால சந்ததியினர் வளர்ச்சியினை பொறுத்தவரை இனிவரும் காலங்களில் கல்விதான் முக்கியத்துவம் பெற்று விளங்கும். எனவே கம்ப்யூட்டர் லேப்டாப் வேண்டுமா? அதிமுக அறிக்கையில் தெரிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

தமிழகத்தில் கடந்த 1989ம் ஆண்டு முதல் 99ம் ஆண்டு வரை ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியர்கள் பணியிடத்திற்கான அனுமதி மட்டுமின்றி உரிய சம்பளத்திற்கான உத்தரவு வழங்க வேண்டுமென முதல்வர் கருணாநிதியிடம் நேரிடையாக வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டதால் தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதியால் அந்த அறிவிப்பு உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

இந்த நல்ல அறிவிப்பிற்காக அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். கடையநல்லூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகளை சமுதாய பணிகளை எண்ணி பாருங்கள். தொடர்ந்து இப்பகுதி மக்கள் வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கைகள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டியுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

வேட்பாளருடன் மாநில காங்., செயலாளர் ஆலடிசங்கரையா, கடையநல்லூர் நகராட்சி தலைவர் காளிராஜ், நகர திமுக செயலாளர் முகமதுஅலி, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது முகமது, தேசிய லீக் தலைவர் கமருதீன், மாவட்ட காங்., துணை தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், முன்னாள் நகர காங்., தலைவர்கள் பெரியசாமி, சங்கரன், மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், தொகுதி இளைஞர் காங்., செயலாளர் பண்பொழி வினோத், புலவர் செல்வராஜ், அப்துல்லா யூசுப் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Add Comment