உயிர் எடுப்பான் தோழன்-ஷார்ஜாவில் நடந்த கொடுரம்

உயிர் கொடுப்பான் தோழன் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஷார்ஜாவில்

நடைபெற்ற ஒரு சம்பவம் உயிரை எடுப்பான் தோழன் என சொல்ல வைத்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஆசிய நாட்டைச் சார்ந்த ஒருவரிடம் 2000 திர்ஹம் இருப்பதாக அவருடைய நான்கு நண்பர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அதனை திருட திட்டமி்ட்ட நண்பர்கள், அவரை ஒரு இடத்துக்கு வந்தால் விபச்சாரம் செய்யும் பெண்களை அறிமுகப்படுத்தி வைக்கிறோம் என அழைத்திருக்கிறார்கள்.

நண்பர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு Buy Cialis சென்றதும் அந்த மனிதரை நண்பர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள். பின்னர் அவரை சோதித்து பார்த்த போது அவரிடம் வெறும் 150 திர்ஹம்தான் இருப்பதை கண்டறிந்தார்கள். அந்த பணத்தை திருடிய அவர்கள் பிணத்தை அருகிலுள்ள முட்புதரில் போட்டு விட்டு சென்று விட்டார்கள்.

மூன்று நாட்களுக்கு பின்பு பிணத்தை கண்ட சிலர் காவல்துறையினரிடம் தெரிவிக்க, காவல்துறை விசாரணை மேற்கொண்டு கொலை செய்த நான்கு நபர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. கொலை செய்தவர்களும் , கொலையுண்டவரும் ஒரு ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை தெரிவித்த காவல்துறை எந்த நாடு என்பதை வெளியிடவில்லை.

Add Comment