ஸ்கூல் கலாட்டா

ஆசிரியை: செம்மொழி மாநாடு நம் நாட்டுக்கு எப்படிப்பட்ட புகழைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பது தெரியுமா?

மாணவி: ஓ! தெரியுமே!

ஆசிரியை: கெட்டிக்காரி! எங்கே சொல்லு பார்க்கலாம்…

மாணவி: உலகிலேயே மொழியின் பெயரால் மாபெரும் ஊழல் செய்த நாடு என்ற “புகழை”த்தான், வேறென்ன!

ஆசிரியை: ???!!

——————————————————————————————————

மாணவி 1: பாடநேரத்தில் பக்கத்தில் வந்து நின்னு அடிக்கடி உன்னை ‘கணக்கு”ப் பண்ணிய கணக்கு வாத்தியார் இப்பெல்லாம் உன் பக்கம் திரும்புறதே இல்லியே, என்னாச்சு?

மாணவி 2: ஓ! அதுவா? ஒரு நாள் அழுத்தமா ஒரே ஒரு இன்ஜெக்ஷன் போட்டேனா, மனுஷன் கத்தவும் முடியாம, கதறவும் முடியாம பல்லைக் கடிச்சுண்டு அப்படியே சொக்க்க்க்கிப்போய் நின்னுட்டார்டி.

மாணவி 1: என்ன இன்ஜெக்ஷன்டி அது? எப்படிப் போட்டே?

மாணவி 2: ‘சேஃப்ட்டி பின்’னால் தான்!

மாணவி 1: அது சரி!

—————————————————————————————————-

ஆசிரியர்: விளி வேற்றுமைக்கு உதாரணம் சொல்லு பார்க்கலாம்…

மாணவன்: கழுதை, கஸ்மாலம், எருமை மாடு, புளிமூட்டை, குட்டிச்சுவர்…

ஆசிரியர்: ஏய், நிறுத்து! நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்றே? உன்னை…

மாணவன் : ஐயோ! அடிக்காதீங்க ஸார். விளி வேற்றுமைன்னா, நம்ப வீட்டுல நம்மை அழைக்கிற விதம்னு நீங்க தானே ஸார் Buy Viagra கத்துக்குடுத்தீங்க? எங்க வீட்டுல என்னை இப்படியெல்லாம்தான் கூப்புடுறது வழக்கம் ஸார்!

ஆசிரியர்: ?????!!!

——————————————————————————————————

ஆசிரியர்: முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் செயல் நமக்கு உணர்த்துவது என்ன?

மாணவன்: வேறென்ன, அந்தாள் சுத்த அசடு என்பதைத்தான் ஸார். ஒரே ஒரு தடி கொடுக்குறதை விட்டுட்டு, தன் பொற் தேரையே கொடுப்பது என்பதெல்லாம், ட்டூ மச் இல்ல ஸார், த்ரீ மச்!

ஆசிரியர்: ???!!!

Add Comment