முதல் போட்டியை டிரா செய்து தெ. ஆப்பிரிக்கா அசத்தல்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி சூடு பிடித்துள்ளது. முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி டிரா செய்து தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளது.

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களுக்கு நேற்று முதல் உலகக்கோப்பை விருந்து தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே நடந்தது.

மைதானத்தை நிரப்பியிருந்த 84,500 ரசிகர்களின் உற்சாக ஆதரவுக் குரல்களுக்கு மத்தியில், தென் ஆப்பிரிக்க வீரர்கள் நம்பிக்கையுடன் ஆட்டத்தில் இறங்கினர்.

வலிமையான மெக்சிகோவை மிகத் திறமையாகவும், தைரியமாகவும் சந்தித்தது மெக்சிகோ. ஆட்டம் மிக மிக விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில், 55வது நிமிடத்தில், தென் ஆப்பிரிக்க வீரர் சிபிவே ஷாபாலாலா அட்டகாசமான கோலைப் போட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு Doxycycline online முன்னிலை தேடிக் கொடுத்தார்.

இதனால் சுதாரிப்படைந்த மெக்சிகோ அடுத்து தனது ஆட்டத்தில் விறுவிறுப்பை முடுக்கி விட்டது. இதற்குப் பலனாக 79வது நிமிடத்தில் ரபேல் மார்க்ஸ் ஒரு
கோலைப் போட்டு சம நிலையை ஏற்படுத்தி விட்டார்.

அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நாயகனாக தென் ஆப்பிரிக்காவின் சிபிவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக இந்தப் போட்டியை தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா தொடங்கி வைத்தார். தனது கொள்ளுப் பேத்தி இறந்த சோகத்தில் இருந்ததால் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா போட்டியைக் காண வரவில்லை.

Add Comment