தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு பல்லாங்குழி

“கொல கொலயா முந்திரிக்கா
நெறய நெறய சுத்திவா”

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த பாடல் வரிகள் இன்றைக்கு இன்பத்தை தரக்கூடியவை. பாண்டி, நொண்டி, கிளித்தட்டு என தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெண்கள் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். அதிலும் பல்லாங்குழி விளையாட்டு சற்று வித்தியாசமானது.

புத்தி கூர்மைக்கு பல்லாங்குழி

Cialis No Prescription style=”text-align: justify;”>பருவம் எய்திய பெண்களை திண்ணையில் தள்ளி வைத்து குறுக்கே உலக்கையை போட்டு தள்ளி வைத்தவுடன் வீட்டுப்பெரியவர்கள் முதலில் தருவது பல்லாங்குழிதான். அந்நிய ஆடவரை பார்க்காமல் மறைவாய் இருக்கும் பருவமடைந்த பெண்கள் தன் சோடி பெண்களுடன் சேர்ந்து பல்லாங்குழி ஆடவேண்டும் என்பது மரபு.

வட்டமாக குழிசெதுக்கிய பலகையில் புளியங்கொட்டையோ, சோழியோ நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து விளையாடுவார்கள். இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் பெண்களின் விரலுக்கு பயிற்சியும், கணக்கு வழக்கில் தெளிவும் ஏற்படுகிறது என்பது நம்பிக்கை.

காலமாற்றத்தால் மறைந்த ஆட்டம்

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இரவில் கண் விழித்திருக்கும் பெண்களும் இந்த பல்லாங்குழியை விளையாடி மகிழ்வர்.

திரைப்படமும் தொலைக்காட்சியும், நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதால் நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைக்கு படிப்படியாக மறைந்து வருகின்றன. ஆணுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதும் விளையாட்டிற்கு நேரமின்மையும் இத்தகைய விளையாட்டுக்கள் மறைய ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Add Comment