1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

என்றும் மனதை விட்டு அகலாத பசுமை நினைவுகளோடு உள்ள
அன்றைய தின வீடியோக்களை நாம் எளிதாக தேட நமக்கு உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதில் 1860 முதல் இன்று வரை
உள்ள அனைத்து வீடியோகளும் நொடியில் கிடைக்கிறது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வீடியோ என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது யூடியுப்
தான் யூடியுப்-ல் வீடியோக்களை தேட பல வசதிகள் வந்துகொண்டே
இருக்கிறது ஆனாலும் அன்றைய தின பழைய வீடியோக்களை தேட
விரும்புபவர்களின் கடினத்தை குறைத்து எளிதாக அன்று முதல் இன்று
வரை உள்ள அனைத்து வீடியோக்களையும் காட்ட ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://yttm.tv

இத்தளத்தின் பெயர் YTTM அதாவது YT  என்பது யூடியுப்- ஐயும்,
TM  என்பது Time Machine என்பதையும் கொண்டு இந்தப்பெயர்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற
கட்டத்திற்குள் எந்த வகையான வீடியோ வேண்டுமோ அதை
தட்டச்சு செய்துவிட்டு அதற்கு அடுத்து இருக்கும் Time Machine Frame-ல்
எந்த ஆண்டில் உள்ள வீடியோ தேட வேண்டுமோ அந்த ஆண்டையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தையும்
தேர்ந்தெடுத்த ஆண்டில் வெளிவந்த வீடியோவும் காட்டப்படும்.
பழமை விரும்பிகளுக்கு மட்டுமல்லாது புதுமை விரும்பிகள் வரை
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். Buy cheap Amoxil

Add Comment