உலககோப்பை ( Behind the Scenes )

India Vs South Africa Match..

இந்தியா Batting Power Play-ல
தடுமாறிட்டு Amoxil No Prescription இருந்தது..

எனக்கு செம டென்ஷன்..

நான் என் Wife-ஐ பாத்து..

” என்ன இப்படி சொதப்பறாங்க..? ”

” நீங்க சொல்லி குடுத்த மாதிரி
ஆடறாங்களோ என்னமோ…?!! ”

” என்ன நக்கலா.? நாங்கல்லாம்
விளையாட Ground-ல இறங்கிட்டா..
சும்மா சிக்ஸ்., சிக்ஸா பறக்கும்.. ”

” ஹி., ஹி., அப்ப நீங்க Bowling தானே
போடுவீங்க..? ”

” கிர்ர்ர்ர்ர்ர்ர்…! ”

——————————————————————————-

அந்த மேட்சல கடைசி ஓவர் நெஹ்ராவுக்கு
குடுத்து.., அவர் ரன் வாரி வழங்கினதால
S.A அந்த மேட்ச்ல ஜெயிச்சுடுச்சு..

அதை பாத்து ஒரு நண்பர் அடிச்ச Tweet..

” ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்…!
என்ன கொடுமை சரவணா இது..? ”

——————————————————————————-

இந்தியா World Cup-ஐ ஜெயிச்சதும்
பக்கத்துல இருந்த Friend-கிட்ட…

” நான் தான் முன்னாடியே சொன்னேன்ல..!
இந்தியா தான் World Cup வாங்கும்னு..! ”

” எப்ப சொன்னே..? Dhoni கடைசி சிக்ஸ்
அடிக்கும் போதா..? ”

” அட.., ஆரம்பத்துலயே சொன்னேனே.. ”

” ஆரம்பத்துலன்னா..? Finals ஆரம்பிக்கும்
போதா..? ”

” World Cup ஆரம்பிக்கும் போதே.. ”

” World Cup ஆரம்பிக்கும் போதேன்னா..
அது 1975-ல ஆரம்பிச்சாங்க.. அப்பவேவா
நீ இதை சொன்ன..?? ”

” கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…….! ”

——————————————————————————-

World Cup Special :

ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.

ஸ்ரீசாந்த் : நான் 10 ஓவர் பவுலிங் போடணும்.,
ஆனா ஒரு ரன் கூட குடுக்க கூடாது..

முனாப் : அப்ப நீ எனக்கு தான் பவுலிங்
போடணும்..!!

——————————————————————————-

ஒரு ரகசியம் : உஷ்..!! சத்தம் போட கூடாது..
அதான் ரகசியம்னு சொல்றோம்ல..

ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

” ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! ”
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!

Add Comment