நமது ஓட்டு யாருக்கு? – தேர்தல் களம்

தமிழ்நாடு முழுவதும் தற்போது விழாக் கோலம் பூண்டிருக்கிறது. தேர்தல் என்ற பெயரில் நடக்கும் காமெடிகளை தினமும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்த்து வருகிறோம். ‘இந்த படை போதுமா?- இன்னும் கொஞ்சம் வேணுமா?’ ‘பனை மரத்துல வவ்வாலா’ என்ற கோஷங்கள் இன்னும் ஒரு வாரத்துக்கு விண்ணைப் பிளக்கும். ஒரு குவார்டருக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் 100 200 ரூபாய் பணத்துக்கும் நாள் முழுக்க ‘வாழ்க, வாழ்க, ஒழிக ஒழிக’ என்று கத்தி ஓய்ந்து விடும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களைத்தான் இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுக்க உடை இந்த மூன்றுக்கும் அல்லாடிக் கொண்டு ரோட்டோரத்தில் கிடக்கும் இந்த சாமான்யன்களின் முன்னேற்றத்துக்கு எந்த முயற்ச்சியும் எடுக்கப்படவில்லை.

 

இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள். இதனால் ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஒரு நாட்டில் ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரிப்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாக முடியும்.

கருணாநிதி: இவருடைய ஐந்து ஆண்டு கால ஆட்சி பல குறைகள் இருந்தாலும் ஓரளவு சிறப்பாகவே நடத்தினார். சாதி மத சண்டைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டது. கல்வி உதவித் தொகை, இலசவ மருத்துவ சேவை, கிலோ ஒரு ரூபாய் அரிசி என்று ஏழைகளை கணக்கிலெடுத்து செயல்படுத்தினார். இடையே வண்ண தொலைக்காட்சி பெட்டி என்ற கோமாளித்தனமான அறிவிப்பையும் செய்யாமல் இல்லை. சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். திரும்பவும் வந்தால் 3.5 சதவீதத்தை 5 சதமாக உயர்த்துகிறேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.

 

ஸ்பெக்ட்ரம் ஊழலை தவிர்த்து விட்டு பார்த்தால் அடுத்த முதல்வராக கலைஞரும் நிழல் முதல்வராக ஸ்டாலினும் வருவது சிறந்தது என்பது எனது அபிப்ராயம்.

ஜெயலலிதா: இத்தனை வருடம் போனபின்னரும் இவருடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை – குறள்

ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிப்பவரது ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். சான்றோர் தம் பகைவரைத் தம துணைவராக மாற்றுவதற்க்குக் கையாளும் கருவியும் பணிவே என்கிறார் வள்ளுவர்.

 

வைகோவை வெளியாக்கியதிலிருந்து எல்லோரையும் கலக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது என்பது வரை எதிலும் இவர் பணிவு கலந்தாலோசிப்பு Buy Viagra Online No Prescription என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஆட்சிக்கு வரும் முன்பே இந்த நிலை. வந்த பின்னால் இன்னும் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றப் போகிறதோ தெரியவில்லை. ஊழலில் திமுக வுக்கு இவர் சற்றும் சளைத்தவரல்ல. நீதி மன்றத்தால் முதல்வர் பதவியை பிடுங்கும் அளவுக்கு அசிங்கப்பட்டார். அங்கு ஸ்டாலின் கனிமொழி என்றால் இங்கு சசிகலாவும் நடராஜனும்.

அடுத்து இவர் ஆட்சிக்கு வந்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.(இப்ப மட்டும் என்ன வாழுதாம்) இந்துத்வாவாதிகளின் ஆதிக்கமும் அதிகரிக்கும். இது பிறபடுத்தப்பட்ட மக்களையும், சிறுபான்மையினரையும் அச்சத்திற்கு உள்ளாக்கும்.

விஜயகாந்த்: ‘டைரக்டர் எங்கு பம்பரம் விடச் சொல்கிறாரோ அங்கு நான் விடுவேன். அதைக் கேட்க நீ யார்?’ என்று அரசியல் பேசும் இவரிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? பிரச்சாரத்துக்கு குடித்துவிட்டு வந்து தனது வேட்பாளரையே அடிப்பதும்,வேறொரு கூட்டணி கட்சிக் கொடி பறப்பதை சகித்துக் கொள்ளாததும் குணத்தில் ஜெயலலிதாவை ஒத்தே இருக்கிறார். ‘ஜாடிக்கு ஏத்த மூடி’

காங்கிரஸ்: ‘தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர்: விடுதலைப் புலிகள் தோல்வியடைய காரணமாக இருந்தனர். எனவே இவர்களுக்கு ஓட்டளிக்கக் கூடாது’என்பது சீமான் போன்றவர்களின் கோரிக்கை. சிங்களர்களின் கொடுமையை தட்டிக் கேட்டு அவர்களை பயத்தில் ஆழ்த்திய வரை ஓகே! பிற் காலங்களில் தன்னை எதிர்த்த தமிழர்களை எல்லாம் விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் போட்டுத் தள்ளியதை வசதியாக மறந்து விடுகிறோம். நிரந்தர தீர்வுகாண விரும்பிய ராஜீவ் காந்தியை கொடூரமாக கொன்றனர். இதனால் அப்போது கலைஞர் தனது ஆட்சியையும் இழக்க நேர்ந்தது. சோனியாவை இளம் வயதிலேயே விதவையாக்கினர். நடுநிலை வகித்த இலங்கை தமிழ் முஸ்லிம்களை பெரும் கோடீஸ்வரர்களை கையில் 500 ரூபாயை கொடுத்து மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பினர். காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொன்றனர்.

 

‘தனி ஈழம்’ என்பதே பூகோள அடிப்படையில் சரியான தீர்வாகாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். உள்ளுக்கள் புகைந்து கொண்டிருக்கும் சாதி வேற்றுமை வேறு பிரபாகரனின் தலைமைக்கு பெரும் இடைஞ்சலாக முன்பு இருந்திருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கையில் அதிகார பகிர்வு செய்து கொண்டு இந்தியாவின் உதவியோடு அமைதியான ஆட்சியை பிரபாகரன் முன்பு கொடுத்திருக்கலாம். எவரது பேச்சையும் மதியாத அவரது குணமே இத்தனை லட்சம் சகோதர தமிழ் மக்கள் உயிர் இழக்க காரணமாக இருந்தது. புலிகளை ஒழிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை காலமானாலும் இலங்கை பிரச்னை ஓயப் போவதில்லை. அதே சமயம் சிங்கள அரசு சகோதர தமிழ் மக்களை கொன்றதும் மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை மத்திய அரசு தலையிட்டு உரிய பரிகாரம் காண வெண்டும். வன்னியில் அகதி முகாம்களில் சிரமபபடும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு தாராள உதவிகளை வழங்க வேண்டும். எனவே தமிழர்களுக்கு இந்த வகையில் காங்கிரஸ் நன்மையே செய்திருக்கிறது என்பேன். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுமானால் இது கசப்பாக தெரியலாம்.

 

மன்மோகனுக்கு அடுத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஆளாக ராகுல்காந்தியை நான் பார்க்கிறேன். ராகுலின் நிர்வாகத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என்பது எனது கணிப்பு.

 

கருத்துக் கணிப்பு: 5000 பேரில் 500 பேர் என்ன கருத்தில் உள்ளார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்டுவது இது. கருத்து கணிப்பு எடுப்பவர் எந்த கட்சியை சேர்ந்தவரோ அதற்கு சாதகமாக முடிவை வெளியிடுவார். இதன்படி பார்த்தால் தற்போது ஜெயலலிதாவுக்குத்தான் ஆட்சி எனபது போல் கணிப்புகள் சொல்கின்றன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்து சாதி மத மக்களும் சகோதர பாசத்தோடு பழக வேண்டும். தமிழகம் மேலும் முன்னேறி வேலை இல்லா திண்டாட்டம் களையப்பட வேண்டும். நமது நாடு முன்னேறிய நாடுகளுக்கு சமமாக உலக அரங்கில் கோலோச்ச வேண்டும். இத்தனையையும் கொண்டு வரும் ஒரு நல்லாட்சியை இறைவன் நமது தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

 

–  சுவனப்பிரியன்

Add Comment