அல்-ஐன் பாரடைஸ் கின்னஸ் உலக சாதனை

அல்- ஐன் அமீரக பாலவனச் சோலைகளில் மிக நளினமானதும் சுற்றுலா தளங்களும் நிறைந்தது. நாங்களும் அடிக்கடி இந்த பூங்கா வழியாகத் தான் போய் வந்து கொண்டிருந்தோம், ஆனால் இதுவரை அல்- ஐனில் உள்ள மற்ற பூங்காக்கள் போலத்தான் இதுவும் என்று உள்ளே நுழையவில்லை.ஏகப்பட்ட பூந்தொட்டிகள் இருக்கே, ஒரு நாள் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். தீடீரென்று கல்ஃப் நியுஸில் அல்-ஐன் பேரடைஸ், பூந்தொட்டிகளால் நிறைந்த அந்த பூங்கா கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளதாக செய்தி பார்த்தோம்.

இதுவரை காத்திருப்பில் இருந்த அந்த பூங்காவை நாங்களும் சென்று ஒரு வழியாக பார்த்து விட்டு வந்து விட்டோம். யு.ஏ.இ. வாசிகள் நேரில் போய் பாருங்க, சின்ன பூங்கா தான் ஆனால் எங்கும் எதிலும் மலர் தொட்டிகளோ தொட்டி. மற்றவர்கள் படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்க.

இது தான் கின்னஸ் சான்றிதழ், பூங்காவின் வாயிலில் புல்லினால் ஃப்ரேம் செய்து வச்சிருந்தாங்க.

உள்ளே நுழைந்தவுடன் ஈபிள் டவரின் மாதிரி வடிவம், அழகோ அழகு.

அப்படியே திரும்பி பார்த்தால் தொங்கும் பூந்தொட்டிகளின் அணிவகுப்பு.

இந்த மஞ்சள் மலரை பார்த்தவுடன் அதன் மகிமையே தனி தான் என்று நினைக்க வைத்தது.

இந்த நீலநிற தொட்டியும் என்னைக் கவர்ந்த ஒன்று.

கிட்டதட்ட 2965தொங்கும் பூந்தொட்டிகளைக் கொண்டுள்ளது. இது உலகில் இரண்டாவது முறையாக இந்த சாதனையை தக்க வைத்துள்ளது. இருபத்தோராயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.யு.ஏ.இ -யில் மிகப் பெரிய பூங்காக்கள் எல்லாம் இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய மலர்கள் தான் இதன் தனித்துவம்.

அமெரிக்கா,ஐரோப்பா,ஜப்பான்,ஜெர்மனி,இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து மலர்ச்செடிகள் கொண்டு வரப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வளர்த்து தொட்டிகளில் அமைத்து அழகு படுத்தியிருந்ததை பாராட்டாமல் இருக்க முடியலை.

மூன்று இதயங்கள் போல் சிவப்பு,வெள்ளை,ரோஜா நிற மலர்களைக் கொண்டு அமைத்திருந்தது மிக அழகு.

மலர்களால் ஆன இந்த பிரமிட் அனைவரையும் கவந்தது.1500மலர் தொட்டிகள் கொண்டு இந்த பிரமிட் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மலர்களை பார்த்து ரசித்து கொண்டு நடந்ததால் நேரம் போனதே தெரியலை.

இருட்ட ஆரம்பித்து விளக்குகளுடன் தோட்டம் ஜொலித்தது.

திரும்பி வரும் பொழுது எடுத்த விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஃபில் டவர் மாதிரி அசத்தலாக இருந்தது.

இது போல அழகழகான மலர்த்தொட்டிகள் எண்ணிலடங்கா. யாரைப்பார்த்தாலும் கேமராவும் கையுமாக அலைந்தார்கள்.

Buy cheap Ampicillin src=”http://1.bp.blogspot.com/-175C2XP7Oog/TZvm5dwCZ3I/AAAAAAAAFvY/QxeSfCwMtaA/s320/aaf.JPG” border=”0″ alt=”” />நான் எடுத்த இந்த ஒற்றை மலர் எப்படியிருக்கு?
ஸ்ஸ்ஸ்சப்பா இன்னும் படங்கள் இருந்தாலும் இணைக்க பொறுமையில்லை.
பார்த்து ரசித்திருப்பீர்கள், அப்படியே படம் நல்லாவேயில்லைன்னு கருத்து சொல்லிடுங்க,அப்ப தான் எனக்கு புது கேமரா கிடைக்கும், மொபைல் வேறு மசாலா வாடை தாங்க முடியலை, அதன் இருப்பிடமே கிச்சன் தான்.
ஏனெனில் அது தானே என் கேமரா. மொபைலில் போட்டோக்களை எங்கேயும் இலகுவாய் எடுக்க வசதியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
–ஆசியா உமர்.

Add Comment