தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்வோம்:முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு

அனைத்து சமுதாய பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரிய கூட்டணி யான தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்வோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி buy Cialis online மாவட்டத் தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து வாக்கு சேகரித்த போது அவர் கூறியதா வது:

திமுக கூட்டணி அனைத்து பாட்டாளிகள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாய பிரதி நிதித்துவத்தைக் கொண்ட அரிய கூட்டணி. இக் கூட்டணியின் எந்தவொரு கூட்டத்திலும் அனைத்து கூட்டணி கட்சிகளின் அங் கத்தினரும் ஒரே மேடை யில் வீற்றிருக்கும் காட் சியை சாதாரணமாகக் காணலாம்.

ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் எத்தனை சமுதாயங்கள் அங்கம் வகிக் கின்றன…? அவர்கள் என் றைக்காவது ஒரே மேடை யில் அமர்ந்து பேசிய துண்டா…? அது முடி யுமா….?

பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்துறையி லும் சிறுபான்மை முஸ் லிம்கள் சிறந்தோங்கும் பொருட்டு நிதியொதுக்கீடு செய்து தந்தவர் கலைஞர்.

முஸ்லிம் மாணவியர் தங்குவதற்காகவென்றே தமிழகத்தில் ஐந்து முக்கிய நகரங்களில் மாணவியர் தங்கும் விடுதி அமைத்துத் தந்தவர் அவர். உலமாக்கள் – பணியா ளர் நல வாரியம் அமைத்து, இன்று அவர்கள் வாழ்வில் தன்னிறைவு காண வழி வகுத்தவர்… அவர்களுக்கு மிதிவண்டியும் வழங்கிய வர்.

வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி நடை முறைக்கு வருவதையடுத்து, சிறுபான்மை மொழி களான உருது, அரபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை இதுவரை கற்று வந்தோர் தமது கல்வி நிலை பாதிக்கப்படும் என அச்சப்பட்ட நேரத்தில், முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்மொழிகளை சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழும் தொடர்ந்து கற்க வாய்ப் பேற்படுத்தித் தந்தவர்.

முஸ்லிம்களின் அடக் கஸ்தலங்களான கபருஸ் தான்கள் ஆக்கிரமிக்கப் படுவதைத் தடுக்கும் பொருட்டு, ஆண்டுக்கு 20 கபருஸ்தான்களைத் தேர்வு செய்து, ஒரு கபருஸ்தா னுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாத்துத் தந்துகொண்டிருப்பவர் கலைஞர்.

நடுவண் அரசு சிறு பான்மை மக்களுக்கென தனி அமைச்சகம் நிறுவி யுள்ளதைப் போல, முதல் வர் கலைஞர் தலைமையி லான மாநில அரசு சிறு பான்மையினருக்கென தனிப்பிரிவை நிறுவி பல் வேறு நலத்திட்டங்களின் மூலம் சமுதாயத்தை மகிழ் வடையச் செய்துகொண்டி ருப்பவர்.

இன்று திமுக கூட்டணி யில் பத்து முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். அனை வருமே இலகுவாக வெற்றி பெறத்தக்க தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஆக, நம் சமுதாயத்தைச் சார்ந்த பத்து பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகச் செல் வதற்கு வாய்ப்பேற்படுத்தித் தந்தவர் கலைஞர்.

முஸ்லிம்கள் நன்றாகத் தான் உள்ளனர். அவர் களுக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவை? என்று கேள்வி யெழுப்பிய, பாபரி மஸ் ஜித் இடிப்பதற்குக் காரண மான கரசேவைக் கும்ப லுக்கு ஆதரவளித்த, ராமர் கோயிலை அயோத்தியி லன்றி எங்கு கட்டுவது? என்று ஆதங்கத்துடன் கேட்ட ஜெயலலிதாவை சமுதாயம் தோற்கடிக்க வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட வேண்டும்.

இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.

Add Comment