கோவை பிரசார கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்பில்லை

கோவையில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய  அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.

இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த் தஞ்சாவூரில் Viagra online இருந்து கோவை விரைந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

இதனால் அதிமுக, தேமுதிக என இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், கோவை கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளன

 

Add Comment