சாதித்துக் காட்டுவாரா மெஸ்சி?: அர்ஜென்டினா-நைஜீரியா இன்று மோதல்

உலககோப்பை கால்பந்து தொடரின் இன்றைய முக்கிய லீக் போட்டியில், அர்ஜென்டினா அணி, நைஜீரியாவை எதிர்கொள்கிறது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில், குரூப் “பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

முன்னாள் வீரர் மாரடோனா தலைமையில், அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது அர்ஜென்டினா அணி. தகுதிச் சுற்றுப் போட்டிகளில், தட்டுத் தடுமாறி வெற்றி பெற்று, உலககோப்பை வாய்ப்பை எட்டியுள்ள அர்ஜென்டினா அணிக்கு, மாரடோனாவின் வியூகங்கள் கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் நைஜீரியா சற்று பலம் குன்றிய அணி என்பதால், இன்றைய போட்டியில் எளிதில் அர்ஜென்டினா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, முதல் போட்டியிலேயே முத்திரை பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்சிலோன கிளப் அணி சார்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், தாய்நாட்டுக்காக பெரிய அளவில் இதுவரை சாதித்து இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் மெஸ்சி. இவர் தவிர, கேப்டன் ஜேவியர் மஸ்காரனோ, முன்கள வீரர் கார்லஸ் டெவேஸ், மத்திய கள வீரர் டி மரியா, வேரான் ஆகியோர் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

இந்த முறை உலககோப்பை தொடரில் கட்டாயம் சாதிப்போம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது நைஜீரியா அணி. அணியின் பயிற்சியாளரான லார்ஸ் லேஜர்பேக், துடிப்புடன் செயல்பட்டு வருவது நைஜீரியாவின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கேப்டன் வான்கோ கானு, நைஜீரியாவின் முன்னணி வீரராக அசத்த உள்ளார். இரண்டு முறை ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற இவர், முனகளத்தில் கோல் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஓபாபேமி மார்டின்ஸ், சானிகைட்டு, ஜான் உடேக் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளனர். தடுப்பாட்டத்தில் திறமை மிக்க நைஜீரியா அணிக்கு கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமா கைகொடுப்பது உறுதி.

ஆப்ரிக்காவின் சிறந்த அணியாக Levitra online நைஜீரியா இருந்தாலும், இரண்டு முறை (1978, 1986) உலக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவின் முன் தாக்குப்பிடிப்பது கடினம் தான். உலககோப்பைக்கு முன்னதாக நட்பு போட்டிகளில், கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஜெர்மனி, ஹைதி, கனடா என அனைத்து அணிகளையும் வீழ்த்தி “சூப்பர் பார்மில்’ உள்ளது அர்ஜென்டினா. நைஜீரியாவோ பயிற்சி போட்டிகளில் பெருமளவில் “டிரா’ மட்டுமே செய்துள்ளது. கடைசியாக வடகொரியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாத்தில் உள்ளது. இதற்கு முன் அர்ஜென்டினா- நைஜீரியா அணிகள் 3 சர்வேதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அர்ஜென்டினா 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி “டிராவில்’ முடிந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெற்றியை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

Add Comment