கச்சத் தீவை மீட்க சோனியாவிடம் கருணாநிதி கோரிக்கை

 

Buy Bactrim Online No Prescription border=”2″ alt=”” hspace=”2″ vspace=”2″ width=”135″ height=”160″ align=”left” />கச்சத்தீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஈழத் தமிழர்களுக்கு ஆட்சியில் சம உரிமை கிடைக்க மத்திய அரசின் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசியது:

“சோனியா காந்தி தமிழகம் வந்து வாழ்த்தும்போதேல்லாம் பலித்துவிடுகிறது. அவரது இன்றைய வாழ்த்தும், தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைத்தோங்க வழிவகுக்கும் என நம்புகிறேன். அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

மாநிலங்களுக்கு இடையிலான தேசியமயமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க, சோனியா காந்தி வழிவகுக்க வேண்டும். முதற்கட்டமாக, தென் மாநில நதிகளை இணைக்க வேண்டும் என்று சோனியா காந்தி மூலமாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களால் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட தமிழ் மொழியை, மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்; தமிழ் மொழியை, இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக்க வேண்டும்  என்று அவரிடம் கோருகிறேன்.

கல்வியை மாநில அரசுப் பட்டியிலில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று தங்கள் மூலம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கச்சத்தீவை இழந்ததால், தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இலங்கை கடற்படையினாரல் மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை உரிய முறையில் நடத்தி தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு சமமான உரிமையும், ஆட்சியில் சம பங்கினையும் அளித்து அரசியல் தீர்வை எட்டுவதற்கு இலங்கையை அரசுடன் பேசி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் கருணாநிதி.

 

Add Comment