கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன் : செந்தூர்பாண்டியன் உறுதி

: “கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்’ என அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் நகராட்சி பகுதிகளிலும், யூனியன் பகுதிகளான ஊர்மேலழகியான், பொய்கை உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஓட்டு கேட்டு அவர் பேசியதாவது:- “”கடையநல்லூர் யூனியன் மற்றும் நகராட்சி பகுதிகளில் கோடைகாலம் என்றாலே குடிநீர் பிரச்னை ஏற்பட்டுவிடுவதாக வாக்காளர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு மட்டுமின்றி பிசான காலங்களில் கருப்பாநதி அணைக்குட்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சீராக கிடைக்கப்பெறாமல் இருந்து வருவதாகவும், அதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து கடையநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டால் கருப்பாநதி அணை மற்றும் கால்வாய்களில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்வேன். பல ஆண்டுகளாக அணை தண்ணீர் எட்டிப் பார்க்காத அணைக்குட்பட்ட குளங்களுக்கு தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட Buy cheap Cialis சில தெருக்களில் அமைந்துள்ள வீடுகளில் வரிவிதிப்பு பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பல மடங்கு வரிவிதிப்பினை தமிழக அரசின் மூலமாக மறுஆய்வு செய்திடவும், ஏனைய பகுதிகளை போன்று குறிப்பிட்ட வீடுகளுக்கும் சீரான வரிவிதிப்பு செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். கடையநல்லூரில் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுப்பதற்கு ஏற்பாடு செய்வேன்” என பேசினார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய பேரவை செயலாளர் பெரியதுரை, ஊர்மேலழகியான் ஜெயக்குமார், பஞ்., தலைவர்கள் மூக்கையா, செல்லப்பா, பராக்கிரமபாண்டிபேரி சுப்பையா, இடைகால் வேல்சாமிபாண்டியன் உட்பட பலர் உடன் சென்றனர்.

Add Comment