“ஓவர்டைம்” செய்தால் “ஹார்ட் அட்டாக்” அபாயம்!

தினமும் buy Ampicillin online 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினசரி ஒன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து அதிக நேரம் வேலையிலேயே செலவு செய்தால் தேவையற்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் குறிப்பாக 11 மணி நேரம் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அங்குள்ள ஒயிட்ஹால் அலுவலகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 7 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கால கட்டத்தில் அவர்கள் வேலை பார்த்த நேரத்தை கணக்கிட்டனர். மேலும் இருதயம் மற்றும் உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையை ஆராய்ந்தனர். அவர்களில் 192 பேர் மாரடைப்பு நோயாளிகளாக இருந்தனர்.

அவர்கள் நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் இவர்கள் ஒயிட்ஹால் அலுவலகத்தில் மட்டுமின்றி வெளியிலும் கூடுதலாக வேறு வேலைகள் செய்து வந்தனர். இதனால் தினமும்11 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment