“டுவென்டி-20′: சாதிக்குமா இந்திய அணி: இன்று ஜிம்பாப்வேயுடன் மோதல்

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும், முதலாவது “டுவென்டி-20′ போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக உள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

Buy Levitra justify;”>சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி, ஜிம்பாப்வேயிடம் இரண்டு போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி பைனல் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதற்கு “டுவென்டி-20′ தொடரில் பழிதீர்த்துக் கொள்ள, இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

முத்தரப்பு தொடரில் கண்ட தோல்விக்கு, இந்திய அணியின் மோசமான துவக்கம் முக்கிய காரணம். முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட வேண்டும். கேப்டன் சுரேஷ் ரெய்னா, 3வது வீரராக களமிறங்கினால் நல்லது. “மிடில்-ஆர்டரில்’ யூசுப் பதான், ரவிந்திர ஜடேஜா ரன் மழை பொழிய வேண்டும்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு அனுபவமில்லாமல் இருப்பது பின்னடைவான விஷயம். அசோக் டிண்டா, உமேஷ் யாதவ் ரன் வழங்குவதை தவிர்த்துவிட்டு, விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது. அணியில் பியுஸ் சாவ்லா இணைவது, சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது. இவருக்கு பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட சுழல் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றியை ருசிக்கலாம்.

முத்தரப்பு தொடரில் இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில், ஜிம்பாப்வே அணி உள்ளது. தவிர, சமீபத்தில் நடந்த “டுவென்டி-20′ உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஜாம்பவான் அணிகளை வீழ்த்தியது. இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான “டுவென்டி-20′ தொடரில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பலமாக காட்சியளிக்கிறது. பிரண்டன் டெய்லர், மசகட்சா, தைபு, சார்லஸ் கோவன்ட்ரி, சிகும்பரா என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஒருநாள் தொடரில் சாதித்த இவர்கள், “டுவென்டி-20′ போட்டியிலும் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணியை எளிதாக வீழ்த்தலாம். பவுலிங்கில் உட்சேயா, பிரைஸ், மபோபு, ரெயின்ஸ்போர்டு உள்ளிட்டோர் அசத்தினால் நல்லது.

Add Comment