அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !

நத்தம் Bactrim No Prescription கோபால்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட நடிகர் வடிவேலுவால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து, நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசும்போது,   ‘’தி.மு.க.,வை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை விசுவநாதனுக்கு (அ.தி.மு.க., வேட்பாளர்) போடுங்கள்’’ என்றார். வடிவேலுவின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.   திமுகவினர் ஆவேசமடைந்து  சப்தம் போட்டதால், சுதாரித்துக்கொண்ட வடிவேலு, க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என மாற்றி கூறினார்.

வடிவேலுவின் பேச்சால் கூட்டத்திற்கு வந்த திமுக தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

Add Comment