அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு !

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதிரிப்பதென மாவட்ட ரஜ்னிகாந்த் ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது குறித்து காஞ்சி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நகரத்தலைவர் கே.செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில், 

2011 ஏப்ரல் 13 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காஞ்சி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி  மன்றம் மற்றும் Buy cheap Levitra அதன் கீழ் இயங்கும் அனைத்து கிளை மன்றங்களும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்திற்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை அவரது இல்லத்தில் சந்தித்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவினையும் வாழ்த்தினையும் தெரிவித்தனர்.

Add Comment