சி.பி.ஐ.விசாரணை தொடங்கியது : சாதிக்பாட்சா தற்கொலை தொடர்பான விவரங்களை சென்னை போலீசார் ஒப்படைத்தனர் !

 

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா.  கடந்த மாதம் 16-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு buy Viagra online பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் டெக்கால், சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து தெரிவித்த கருத்துகளும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன.  கழுத்து இறுக்கப்பட்டதால் சாதிக் பாட்சாவின் உயிர் பிரிந்துள்ளது. அவர் உயிருடன் இருந்தபோது கழுத்து இறுக்கப்பட்டதா? இறந்தபின்னர் கழுத்து இறுக்கப்படுள்ளதா? என்பதை உறுதியாக கூறுமுடியவில்லை. கழுத்து சதை பகுதியை ரசாயன பரிசோதனை செய்த பின்னர்தான் இது பற்றிய விவரங்கள் தெரியவரும் என்று டாக்டர் டெக்கால் கூறியிருந்தார்.

சாதிக்பாட்சாவின் சாவில் இதுபோன்ற பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. சாதிக்பாட்சா தற்கொலை செய்வதற்கு முன்னர் 2 பேர் காரில் வந்து அவரை மிரட்டிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது. சாதிக்பாட்சா தற்கொலை செய்த அன்றே இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. 2 வாரங்களுக்கு பின்னர் சாதிக்பாட்சா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. ஏற்றுக் கொண்டுள்ளது. சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ. போலீசார் இது தொடர்பான முறையான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு சி.பி.ஐ. தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.   இதையடுத்து சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சி.பி.ஐ.யிலும் ஒப்படைக்கப்பட்டது. டி.எஸ்.பி. அந்தஸ்திலான சி.பி.ஐ. அதிகாரி இனி விசாரணை நடத்துவார்.

சாதிக்பாட்சா தற்கொலை செய்த அறையில் கடிதம் ஒன்றையும் கைப்பற்றினார்கள். இக் கடிதம் சாதிக் பாட்சாவால் எழுதப்பட்டது தானா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து 16-ந் தேதி வரை சாதிக்பாட்சா யார் யாருடன் செல்போனில் பேசியுள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார் என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சாதிக்பாட்சா 2 செல்போன்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. சாதிக்பாட்சா தற்கொலை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இது பற்றிய விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சாதிக்பாட்சா வழக்கு சி.பி.ஐ.க்கு முழுமையாக மாற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தென்சென்னை இணை கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.

Add Comment