குஷ்பு ஏன் பிரச்சாரம் செய்கிறார்? : நிருபர்களின் கேள்விகளுக்கு திணறிய ராமதாஸ் பதில்

சேலத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ் மொழி மீது அக்கறை கொண்டுள்ளவர்களாக காட்டிக் கொள்ளும், தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழ் பெண்களின் கற்பை அலட்சியப்படுத்தி பேசிய குஷ்புவை பிரச்சாரத்தில் பயன்படுத்துவதன் காரணம் என்ன?
தமிழ் பெண்களை பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமின்றி, அது குறித்து நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் நீங்கள், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், “டாஸ்மாக்’ அகற்ற கோரி போராட்டம் நடத்துவீர்களா?
தமிழகத்தில் பா.ம.க., பூரண மதுவிலக்கு மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பெண்களுக்கு ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் பா.ம.க.,வில், தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?
தேர்தலில் போட்டியிட பெண்கள் யாரும் விரும்பவில்லை. மேலும், அவர்கள் போட்டியிடுவதற்கு, அவர்களின் கணவன்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
காங்கிரஸ் உடன் சீட் ஒதுக்கீடு பேரத்தில் ஏற்பட்ட மோதலால், தி.மு.க., மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவதாக மிரட்டியது. ஆனால், இலங்கையில் லட்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லையே ஏன்?
அது… அது… என கூறியவர், கடைசி வரை இக்கேள்விக்கு பதில் கூறிவில்லை.
பா.ம.க., 2011ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற கோஷம் என்னாச்சு?
அது பழைய கேள்வி.
தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க., அணி மாறுவது ஏன்?
பா.ம.க., மட்டும் அணி மாறவில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் அணி மாறுகின்றன.

(நிருபர்களின் online pharmacy without prescription கேள்வி கணைகளால் திணறிய ராமதாஸ், பல கேள்விகளுக்கு மழுப்பல் பதில்களையும், சில கேள்விகளுக்கு பதிலே தெரிவிக்கவில்லை.)

Add Comment