தமிழகம் முழுவதும் 171 போலி டாக்டர்கள் கைது

எம்பிபிஎஸ் படிக்காமலேயே ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்த 171 போலி டாக்டர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் Buy Levitra Online No Prescription சித்த வைத்தியம் உள்ளிட்ட சில பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை படித்துவிட்டு பலர் அலோபதி மருத்துவ முறையி்ல் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகன்றனர்.

இந் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். ஊர், ஊராக பல மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.

சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, நெல்லை, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.இந்த வேட்டையில் ஒரே நாளில் 171 பேர் பிடிபட்டனர்.

நெல்லையில் 34 பேர் கைது:

அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் தான் 34 பேர் பிடிபட்டனர். இவர்களில் பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருபவர்கள் ஆவர்.

திசையன்விளை, களக்காடு, கோவில்பத்தை, கீழப்பத்தை கிராமங்கள் மற்றும் நாங்குநேரி, வள்ளியூர், ஏர்வாடி ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், புளியங்குடி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பெண்களும் அடங்குவர்.

‘எஸ்.எஸ்.எல்.சி. டாக்டர்’:

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வரும் எஸ்.எஸ். ராயன் (70) என்பவர் ஆர்.எம்.பி. படித்து இருப்பதாக போர்டு வைத்துள்ளார்.

ஆனால், இவர் ஊசி எல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளிப்பது வந்தார். விசாரணையில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது. 1969ம் ஆண்டு முதல் இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மட்டுமே படித்துவிட்டு, டாக்டர் தொழில் செய்து வந்த மாதம்மாள் (38), தர்மபுரிதொட்டம்பட்டியில் 2 பேர், சேலத்தில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி வந்த தபரே ஆலம் (42) ஆகியோரும் கைதாயினர்.

மதுரை மாவட்டம் மேலூரில்..

மதுரை மாவட்டம் மேலூரில் மூலம், பெளத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரஞ்சித் மோண்டல் (35) என்பவர் கைதானார்.

அதேபோல இங்கு கிளீனி்க் நடத்தி வந்த நடத்தி வந்த மதார் (65), ராஜகோபால் (65) ஆகியோரும் கைதாயினர். அலங்காநல்லூரிலும் 3 பேர் கைதாயினர்.

திருச்சி-கோவையில்…

அதே போல திருச்சியில் 5 பேரும், மன்னார்குடியில் கிளினிக் நடத்தி வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஈச்சனாரியை சேர்ந்த ரமா பூபதி (45) என்ற ஹோமியோபதி படித்த பெண் டாக்டர் அலோபதி சிகிச்சை அளிப்பது வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காளியம்மாள் (28) என்ற பெண் மருத்துவம் படிக்காமலேயே ஊசியெல்லாம் போட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

அதே போல பண்ருட்டியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இன்று பல மோசடி கிளீனிக்குகள் திறக்கப்படவே இல்லை. அங்கு சிகி்ச்சை அளித்த ‘டாக்டர்களையும்’ காணவில்லை. அவர்கள் எல்லாம் தலைமறைவாகியுள்ளனர்.

இது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி ராதாகிஷ்ணன் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 153 பேர் கிராமப்புறங்களில்தான் பிடிபட்டுள்ளனர். கைதானவர்களில் 101 பேரிடம் எந்தவித சான்றிதழ்களும் இல்லை. 70 பேர் டிப்ளமோ சான்றிதழ்கள் வைத்திருந்தனர்.

கிராமப்புற மக்களை ஏமாற்றி இவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடக்கும் என்றார்.

Add Comment