கடையநல்லூரில் TNTJ ஆலோசனைக் கூட்டம்

Levitra No Prescription alt=”” width=”400″ height=”300″ />கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கிளைகளின் தேர்தல் களப்பணி மற்றும் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் TNTJ பஜார் கிளை மர்கஸில் வைத்து துபை மண்டல தாவா அணிச் செயலாளரும்,கடையநல்லூர் கிளைகளின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ.M.J.முஹம்மது அலி அவர்கள் தலைமையில்,மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் 06/04/2011 அன்று மக்ரிபுக்கு பிறகு நடைபெற்றது.
இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08/04/2011 வெள்ளி அன்று கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் வைத்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்

நன்றி:கடையநல்லூர் TNTJ

Add Comment