பாலிவுட் நடிகர்களுக்கு நேரமிருக்கிறது: தமிழ் நடிகர்களுக்கு இல்லாதது ஏனோ?

ஹசாரேயில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு அமிர்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் என, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில், சினிமா ஷூட்டிங்கிலும், அரசியல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் நடிகர்களின் இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

 

ஹசாரேவுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு: லஞ்ச ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேவுக்கு, நாடு முழுவதும் பலத்த ஆதரவு அலை வீசி வருகிறது. டில்லியில், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர், தங்கள் கையில் மெழுகுவத்தி ஏந்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுபோல், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இ.கம்யூ., பரதன் உள்ளிட்ட அரசியல் கட்சியத் தலைவர்களும், ஹசாரேவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பரபரப்பாக பேசப்படும் இந்த சூழலில், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் பலரையும் தட்டிஎழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பல்வேறு சமூக அமைப்பினரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, உண்ணாவிரத buy Bactrim online போராட்டம் நடத்த முன்வந்துள்ளனர்.

 

மத்திய அரசுக்கு பரதன் கோரிக்கை: சென்னையில் நிருபர்களிடம் பேசிய இ.கம்யூ., பொதுச்செயலாளர் பரதன், ஊழலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என, டில்லியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். கடந்த 42 ஆண்டுகளாக, ஊழலைத் தடுப்பதற்கான, “லோக்பால்’ மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சமூக சேவகரின் கோரிக்கையை, உடனே மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

உலகெங்கும் குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் அன்னா ஹசாரேவுக்கு, உலகெங்கிலும் இருந்து ஆதரவு குவிகிறது. “தினமலர்’ இணையதளத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.Add Comment