கடையநல்லூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழகத்தில் காங்., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு ராகுல் எடுக்கும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் இளைஞர்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ., ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடையநல்லூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., சார்பில் தொகுதி எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் காங்., பொதுக்கூட்டம் நடந்தது. சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத் தலைமை வகித்தார். இளைஞர் காங்., பொதுச் செயலாளர்கள் கொடிக்குறிச்சி சந்திரசேகரன், காந்தி, கதிரவன், வட்டார காங்., தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் ஆலடி சங்கரையா, செங்கோட்டை ராம் மோகன், மதுரை தொகுதி முன்னாள் எம்.பி., ராம்பாபு, யூனியன் சேர்மன்கள் சட்டநாதன், காமராஜ், நகராட்சி தலைவர் இப்ராகிம், டவுன் பஞ்., தலைவர்கள் சிவகிரி போஸ், ஆய்க்குடி வள்ளிமயில், மாவட்ட காங்., துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை, வட்டார தலைவர்கள் கிளாங்காடு மணி, மீரான்மைதீன், திவான், வேல்சாமி, சுந்தரையா, Buy Amoxil Online No Prescription தென்காசி லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் பாக்கியராஜ், மாவட்ட செயலாளர் நவாஸ்கான், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சண்முகவேல், மதுரை மாநகராட்சி காங்., தலைவர் சிலுவை, மாநில பேச்சாளர் பால்துரை, வக்கீல் ராம்குமார், ஆய்க்குடி கார்வின் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் மதுரை மேற்கு தொகுதி காங்., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசியதாவது: சட்டசபையில் பீட்டர் அல்போன்ஸ் பணி கருத்துள்ளதாகவும், ஆற்றல் பெற்றதாகவும் இருக்கும். இந்த விழா பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் விழா என்று கூறுவதை விட, காங்., கட்சிக்கு வலிமை சேர்க்கும் விழா, காங்.,கட்சியை முதன்மைப்படுத்தும் விழா என்றுதான் கூற வேண்டும். அத்தகைய காங்., கட்சியின் முதன்மை பெற்ற தளபதியாக பீட்டர் அல்போன்ஸ் பணியாற்றி வருகிறார். காமராஜரின் அரசியல் வழியை பின்பற்றும் பண்புமிக்கவர். கடையநல்லூர் தொகுதி நலனுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்பவர். தமிழகத்தில் காங்., தலைமையிலான ஆட்சி அமைவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான பொறுப்பினை வழிகாட்டுதலை ராகுல் மேற்கொண்டு வருகிறார். இதற்கு இளைஞர் காங்., கட்சியினர் கடினமாக உழைக்க வேண்டும். ராகுல் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிப்பது காங்கிரஸ் தான். காங்., தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. எனவே தமிழகத்தில் காங்., ஆட்சி அமைந்திட ராகுல் எடுக்கும் முயற்சிக்கும், திட்டங்களுக்கும், உழைப்பிற்கும் இளைஞர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் பிறந்த தின விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட 60 அடி கேக்கினை பண்பொழி வினோத் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Add Comment