மைனாரிட்டி அரசை அகற்ற வேண்டும் : மமக.,மில்லத் இஸ்மாயில் ஆவேசம்

“மைனாரிட்டி மக்களுக்கு எதிரான மைனாரிட்டி திமுக அரசை அகற்றும் வரையிலும் உறங்க கூடாது’ என வீராணத்தில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பேச்சாளர் மில்லத் இஸ்மாயில் பேசினார். வீராணத்தில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் மில்லத் இஸ்மாயில் பேசியதாவது:- “”தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த மைனாரிட்டி அரசு சிறுபான்மை மக்களுக்காக எந்த காரியத்தையும் Buy Cialis Online No Prescription செய்யவில்லை. ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கி தங்கள் குடுத்திற்கு வளம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தன்னுடைய திறமையான பேச்சுக்களால் கருணாநிதி சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வருகிறார். அவரை நம்பி அவருடன் சேர்ந்துள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்த சீட்டையும் பறித்துக் கொண்டார். எனவே ஆட்சி மாற்றம் வந்தால்தான் சிறுபான்மையினருக்கு நன்மைகள் கிடைக்கும். எனவே 100 சதவீத ஓட்டுக்களையும் இரட்டை இலை சின்னத்திற்கு வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் வீரபாண்டியன், அதிமுக கிளை செயலாளர்கள் ஜிந்தாமதார், வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் கீழப்புலியூர் ஒன்றிய தலைவர் ஷாஜகான், வீராணம் தலைவர் முகம்மது அலி, செயலாளர் முகம்மது, பொருளாளர் முகம்து இஸ்மாயில், துணை செயலாளர் அகமது இப்ராகிம், முஸ்லிம் முன்னேற்ற கழக செயலாளர் அப்துல் முத்தலிப் உட்பட ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Add Comment