கடையநல்லூர் மக்களுக்கு பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

Bactrim online justify;”>”சாதனை மிக்க பணிகள் தொடர கை சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்’ என கடையநல்லூர் தொகுதி காங்.,வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார். கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:- “”ஐந்தாண்டுகளில் இந்த பகுதிகளில் என்ன என்ன பணிகள் நடந்துள்ளது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பாக எப்படியிருந்தது என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது அதிகமான போக்குவரத்து அமைந்துள்ள கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கர சாலை போல காணப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையின பெண்கள் 6ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிப்பதற்கு 250 மாணவியர் கொண்ட ஒரே விடுதி தமிழகத்தில் அனுமதி பெறப்பட்டது. அந்த விடுதியும் கடையநல்லூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக 22 கோடி ரூபாய் செலவில் புணரமைப்பு பணிகள் நடந்துள்ளது. 3.5 சதவீத முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட கோரிக்கை தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் உங்களின் ஓட்டுரிமை பல்வேறு நலத்திட்டங்களையும், சாதனை மிக்க பணிகளையும் மேற்கொள்ள பயனுள்ளதாக அமைந்தது. இதேபோன்று மீண்டும் கடையநல்லூர் தொகுதி தமிழகத்தில் முதன்மை பெறுவது மட்டுமின்றி முதலிடமும் பெறுவதற்கு கை சின்னதிற்கு ஓட்டளியுங்கள்” என்றார்.

Add Comment