குற்றாலத்தில் இன்று கல்லூரி நிறுவனர் நூற்றாண்டு விழா

குற்றாலம் பராசக்தி கல்லூரி நிறுவனர் நூற்றாண்டு விழா இன்று (8ம் தேதி) நடக்கிறது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி நிறுவனர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (8ம் தேதி) நிறுவனர் சிலை திறப்பு விழா நடக்கிறது. கல்லூரி வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் நடக்கும் சிலை திறப்பு விழாவில் கல்லூரி நிறுவனர் சுப்பையா முதலியார் சிலையை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் முருகதாஸ் தீர்த்தபதி திறந்து வைக்கிறார். பாகீரதி அம்மையார் சிலையை முன்னாள் முதல்வரும், செயலாளருமான அழகம்மாள் திறந்து வைக்கிறார். பேராசிரியை சுப்புலட்சுமி கடவுள் வாழ்த்து பாடுகிறார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்கிறார். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி செயலர் புகழேந்திரன் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியைகள் அழகம்மாள், ஜெயலட்சுமி, சித்ரலேகா, விமலா, காந்தி, கலைவாணி, விஜயலெட்சுமி, வாசுகி, விஜயலட்சுமி செல்லம்மாள், சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றுகின்றனர். Doxycycline No Prescription விழா ஏற்பாடுகளை சிலை ஒருங்கிணைப்பு குழுவினர் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, தலைவர் கீதாஞ்சலி, செயலர் வேலம்மாள், பொருளாளர் கருப்பாயி, பிரேமா, சுப்புலெட்சுமி, சண்முகசுந்தரம், செல்லம்மாள், உலகம்மாள் மற்றும் பழைய மாணவியர் சங்கத்தினர் உட்பட பலர் செய்துள்ளனர். பேராசிரியை வேலம்மாள் நன்றி கூறுகிறார்.

Add Comment