முஸ்லிம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவி சங்கம் சார்பில் 146 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வியாழக்கிழமை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தையல் இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் பேசியதாவது:

ஆதரவற்ற, பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் buy Cialis online வகையில் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தில் 240 ஜமாத்களுக்கு கடிதம் எழுதப்பட்டு, 146 ஜமாத்களைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தால் அவர்களுக்கும் தையல் இயந்திரம் வழங்கப்படும்.

இந்த முஸ்லிம் பெண்கள் உதவி சங்கத்திற்கு 31.3.2009 வரையில் புரவலர்களிடமிருந்து ரூ. 3.70 லட்சம் பெறப்பட்டு, அதே அளவு தொகை அரசிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. புரவலர்களிடமிருந்து பணம் பெறப்பட்டதில் இம் மாவட்டம் தமிழ்நாட்டில் 2-வது இடத்தை பெற்றுள்ளது என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் பேசியதாவது: இந்த சங்கத்திற்கு நிகழ் நிதியாண்டில் புரவலர்களிடமிருந்து ரூ. 8.10 லட்சம் பெறப்பட்டுள்ளது. அரசு தனது பங்குத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தியுள்ளது. வெளியே செல்லாத முஸ்லிம் பெண்கள் தங்களின் வருமானத்தைப் பெருக்கி கொள்ள இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் டாம்கோ நிறுவனம் மூலம் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் கடனுதவி அளிக்கப்படுகிறது. அரசின் இதர திட்டங்கள் மூலமும் இவர்கள் பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில், மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், எஸ்.எஸ். மைதீன், மகளிர் திட்ட அலுவலர் முத்துமீனாள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், முஸ்லிம் பெண்கள் உதவி சங்க கெüரவ செயலர் எஸ்.கே. செய்யது அகமது, இணைச் செயலர் எம்.கே.எம். செய்யது அகமது கபீர், ஆயுள்கால உறுப்பினர் முகம்மது ஷாபி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Add Comment