அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் பசி, பட்டினி தலைவிரித்தாடும் * அப்துல்ரகுமான்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பசி, பட்டினி தலைவிரித்தாடும்’ என முஸ்லிம் லீக் வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் பேசினார்.
கயைடநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்சை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட செயலாளர் செய்யது முகமது, திமுக நகர செயலாளர் முகமதுஅலி மற்றும் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட Buy cheap Viagra நிர்வாகிகள் உட்பட பலர் பேசினர்.
ஓட்டு கேட்டு வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார். தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் பேசியதாவது:-“”முஸ்லிம் லீக்கிற்கு பிரதிநிதித்துவம் தரும் இயக்கம் திமுக தான். தறபோதைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 5 சதவீதம் தரப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருப்பதை போன்று இட ஒதுக்கீடு வேண்டுமென கேட்டபோது தமிழகத்தில் அதற்கான வாய்ப்பில்லை என கூறிவிட்டார். இடஒதுக்கீட்டை அங்கீகரிக்கும் வகையில் குரல் கொடுத்துள்ள கட்சிக்கு நன்றியுள்ள சமுதாயமாகவும், விசுவாசமுள்ள சமுதாயமாகவும் முஸ்லிம் லீக் இருக்கும்.திமுக ஆட்சியில் தான் உலமாக்களுக்கு நல வாரியம் இருந்தது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதியை இழந்துவிட்டது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறந்து விளங்கும் மாநிலமாக சகோதரத்துவம் நிறைந்த தமிழகமாக சரித்திர புகழ்பெற்று விளங்குகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும். ஜெயலலிதா மீண்டும் வந்துவிடக்கூடாது. ஆட்சிக்கு அவர் வந்துவிட்டால் தமிழகம் இருண்டு அவல நிலைக்கு தள்ளப்படும். பசி, பட்டினி தலைவிரித்தாடும்.திமுக ஆட்சியில் பசி, பட்டினி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் பசி பட்டினியால் ஏற்பட்ட அவலநிலை உங்களுக்கு தெரியும். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசிடம் உரிய திட்டங்களை பெறுவதற்கு பெரும் முயற்சியாக இருந்து அதனை செயல்படுத்த ஏற்பாடு செய்தவர் பீட்டர் அல்போன்ஸ். அத்தகைய சிறுபான்மையினர் நலனை விரும்பும் காங்., கட்சி சார்பில் போட்டியிடும் பீட்டர் அல்போன்சிற்கு கை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.தமிழகம் தற்போது வசந்த பூமியாக காட்சியளிக்கிறது. தமிழகத்தை தலைமையேற்று நடத்த முழு தகுதி படைத்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் செய்த சாதனைகளுக்கு நன்றி விசுவாசத்தை காட்டக்கூடிய நாள் தான் வரும் 13ம் தேதி” என்றார்.

Add Comment