தமிழகத்தின் முதல்வராக கலைஞர் அவர்கள் வருவதுதான் நாட்டுக்கும் நல்லது-ஏ.ஷபிகுர் ரஹ்மான்

தமிழகத்தின் முதல்வராக கலைஞர் அவர்கள் வருவதுதான் நாட்டுக்கும் நல்லது Lasix online நமக்கும் நல்லது என்று கூறியவர் காயிதே மில்லத்
கடலூரில் நடைப்பெற்ற தி.மு.க கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் பேச்சு .
கடலூர் :10 . ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  சனிக்கிழமை (நேற்று) மாலை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட தி.மு.க செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில்   நடைப்பெற்ற  இக்கூட்டத்தில்  தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுரையாற்றினார் இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  பங்கேற்று பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் பேசியதாவது :தமிழக முதல்வராக பணியாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்தியச் செய்தியை கேட்டு நாங்களெல்லாம்  கவலையுடன் அறிஞர் அண்ணா அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின் காயிதே மில்லத் அவர்களின் வீட்டிற்கு சென்று எங்களின் கவலையை பகிர்ந்துக் கொண்டு ஆறுதல் பெற்ற சமயத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்று காயிதே மில்லத் அவர்களிடம் கேட்டோம் அதற்க்கு கலைஞர் அவர்கள்தான் முதல்வராக வரவேண்டும் கலைஞர் முதல்வராக வருவதுதான் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது என்று காயிதே மில்லத்  அவர்கள் சொன்னச் செய்தியை இங்கே நினைவுப் படுத்துகிறேன் அரசியல் மேதையாகவும் இறை நேசச் செல்வராகவும் திகழ்ந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் கலைஞர் அவர்களைப்பற்றி அவரின் அறிவார்ந்த சேவைகளைப்பற்றி பெரிதும்  பாராட்டியுள்ளார்கள் விழுப்புரத்தில் நடைப்பெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் நன்றாக வாழ வேண்டுமென்றால்  கலைஞர் அவர்களே மீண்டும் நாட்டை ஆளவேண்டும் அப்போதுதான் நாம் நன்றாக வாழமுடியும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன்  அவர்கள் கூரியதை இங்கே நினைவுப்படுத்துகிறேன் 6 வது முறையும் கலைஞர் அவர்களை முதல்வராக்கிட நம் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ,காங்கிரஸ் சார்பில் நெடுஞ்செழியன்,பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் ,ப.ம.க.சார்பில் வேல்முருகன் ,மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஸ்ரீதர்வண்டையர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் மற்றும் பலர் உரை நிகழ்த்தினர் இந்நிகழ்ச்சியில்  கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகளான விருத்தாச்சலம் ஏ.சுக்கூர்,கடலூர் இஸ்மாயில்,சிதம்பரம் எம்.தாஜுத்தின்,பி.முட்லூர் கப்பார் கான் ,ரசித் ஜான் ,லால்பேட்டை ஏ.எஸ்.அஹமத்,சல்மான் பாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்
MUDUVAI HIDAYATH

Add Comment