கடையநல்லூர் காங்.,வேட்பாளருடன் ஒருநாள்…

கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளராக போட்டியிடும் பீட்டர் அல்போன்ஸ் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரத்தில் ஒருநாள் பார்த்து, ரசித்து, கேட்ட தகவல்களில் சில…காங்., வேட்பாளராக போட்டியிடும் பீட்டர் அல்போன்ஸ் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தென்காசியில் குடியிருக்கும் அவர் நேற்று காலை பத்திரிக்கைகளில் செய்திகளை படித்துவிட்டு வழக்கம் போல் தனது வாக்கிங் பணியையும் முடித்து கொண்டு 7 மணிக்கு தனது வீட்டில் உள்ள அலுவலக அறைக்கு வந்தார். பிரசாரத்திற்காக அனுப்பப்பட கூடிய வாகனங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்த அவர் நேற்றுடன் தனது தேர்தல் பிரசார பயணத்தை முடித்து கொள்வதால் மிகவும் பரபரப்பாக காணப்பட்டார்.தேர்தலுக்கு முன்பாக பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்ட ஷெட்யூல்டு படி கடந்த 6ம் தேதி பிரசாரம் முடிவடைந்திருக்கும். ஆனால் மத்திய அமைச்சர் வாசன், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது சுற்றுப்பயணத்திற்காக இரண்டு நாட்கள் அவர்களுடன் வாக்காளர்களை சந்திக்க வேண்டியிருந்ததால் இதற்கான பணி மீண்டும் 3 நாள் நீடிக்கப்பட்டது. வாக்காளர்களை சந்திப்பதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைவதால் மிகவும் பரபரப்பாக காணப்பட்ட அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அவ்வப்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை மிஸ் பண்ணாமல் சிரித்தபடி பதில் கூறி பேசினார்.பின்னர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட கணக்கப்பிள்ளைவலசை பகுதிக்கு ஓட்டு கேட்க புறப்பட்டார். அவருடன் மாவட்ட காங்., துணை தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், ஒன்றிய திமுக செயலாளர் ராமையா மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடன் சென்றனர். கணக்கப்பிள்ளைவலசையில் காலை நேரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே தனது பிரசாரத்தை 8.30 மணிக்கெல்லாம் துவக்கினார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை திமுக கூட்டணி கட்சியினர் அளித்தனர்.அப்பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் திடீரென வேனில் இருந்து இறங்கி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று மூதாட்டிகளை கண்டு அவர்களிடம் சென்று நலம் விசாரித்து கை சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். முதியோர்கள், திருமலைக்கோயிலுக்கு அவர் செய்த மலைப்பாதை அமைக்கும் பணியினை பாராட்டி கோயிலின் சிறப்பினை அகில உலக அளவிலும் இடம்பெற செய்யுங்கள் என அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர். கை சின்னத்திற்கு நீங்கள் ஓட்டு போட்டால் கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.அதனை தொடர்ந்து கணக்கப்பிள்ளைவலசை பகுதியில் வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று ஓட்டுக்களை சேகரித்தார். வேட்பாளரை பார்க்க நின்ற பொதுமக்களிடம் கை கூப்பி கை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “”கடையநல்லூர் தொகுதியில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் இத்தொகுதி தமிழகத்தில் முதன்மை பெற்ற தொகுதியாக மீண்டும் விளங்கிடும். கணக்கப்பிள்ளைவலசை பகுதியில் அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுத்து கடந்த 5 ஆண்டுகளில் பணிகள் நடத்தப்பட்டுள்ளது. இலத்தூரில் இருந்து கணக்கப்பிள்ளைவலசை வழியாக செங்கோட்டைக்கு செல்லும் பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சாலைகள் இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் பார்த்ததுண்டா? இதேபோன்று சாலைகள் எப்போதும் காணப்பட கை சின்னத்திற்கு ஆதரவினை தாருங்கள்” என்றார்.தொடர்ந்து அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் மதியம் தென்காசி வீட்டிற்கு சென்று 3 மணிக்கு மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து திருச்சிற்றம்பலம் பகுதிக்கு வருகை தந்தார். அதனை தொடர்ந்து அச்சம்பட்டி, திரிகூடபுரம் பஞ்.,சிற்குட்பட்ட முத்துசாமிபுரம், திரிகூடபுரம் ஆகிய பகுதிகளில் இரவு வரை பிரசாரம் செய்தார். அனைத்து பகுதிகளிலும் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திரிகூடபுரத்தில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்சிற்கு நாடாளும் மக்கள் கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தது திமுக கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சி தந்ததை காணமுடிந்தது. தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரம் குறித்து கூறியதாவது:-“”கடையநல்லூர் தொகுதி மக்கள் மீண்டும் எனக்கு எம்எல்ஏ வாய்ப்பினை தருவார்கள் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் மூலம் இத்தொகுதியில் மட்டும் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் நடந்துள்ளது. திரிகூடபுரம், சொக்கம்பட்டி, கடையநல்லூர், முத்துசாமிபுரம் பகுதி விவசாயிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய கருப்பாநதி சாலை 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பெரியசாமி அய்யனார் கோயிலுக்கு செல்லும் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டது.வரலாற்று சாதனைகள் தான் கடையநல்லூர் தொகுதியில் நடந்துள்ளது. அதற்கு உதாரணமாக திருமலைக்கோயிலில் இதுவரை பக்தர்கள் திருப்படிகள் வழியாக சென்று திருக்குமரனை வழிபட்டு வந்தனர். ஆனால் வயோதிகர்களும் Viagra online திருக்குமரனை வழிபடும் வகையில் வரலாற்று சாதனை திட்டமாக மலைப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்கும் தேர்தல் பிரசாரம் இன்றுடன் அதற்கான ஷெட்யூல்டு முடிகிறது. மீண்டும் இந்த வாய்ப்பினை கடையநல்லூர் தொகுதி மக்கள் எனக்கு அளித்தால் தமிழகத்தில் கடையநல்லூர் தொகுதி இன்னும் 25 ஆண்டு காலத்திற்கு முதன்மை பெற்ற தொகுதியாக விளங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.ஓட்டு சேகரிப்பில் வேட்பாளருடன் முன்னாள் யூனியன் தலைவர் அய்யாதுரை, வட்டார காங்., தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், கிளாங்காடு மணி, திரிகூடபுரம் நா.ம.க., கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், பொது செயலாளர் காந்தி, சுந்தரேசபுரம் சுந்தரையா மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.3

Add Comment