கடையநல்லூரில் பரபரப்பு… நா.ம.க., வேட்பாளர் அ.தி.மு.கவில்… தொண்டர்கள் காங்கிரசில்…

கடையநல்லூர் தொகுதியில் நாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்ததையடுத்து கட்சி தொண்டர்கள் காங்., கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.கடையநல்லூர் தொகுதி நாமக கட்சி வேட்பாளராக சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசார பணிகளை இந்த கட்சி கடந்த வாரம்தான் துவக்கியது. இதனிடையில் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் Lasix No Prescription பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், புறநகர் மாவட்ட செயலாளருமான செந்தூர்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக அறிவித்தார்.மேலும் நாமக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைவதாகவும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனிடையில் நாமக வேட்பாளர் அதிமுவில் சேர்ந்ததை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்கள் நடிகர் கார்த்திக் ஆலோசனையின்படி கடையநல்லூர் தொகுதியில் காங்., கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை திரிகூடபுரம் நாமக கட்சி நிர்வாகிகள் கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் முன்னிலையில் அவருக்கு ஆதரவாக சால்வை அணிவித்து பிரசார பணிகளை துவக்கினர்.நாமக கட்சி வேட்பாளர் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலையில் நிர்வாகிகள் பலர் காங்., கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதால் நாமக தேர்தல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

Add Comment