வடிவேலு மீது கல்வீச்சு: திமுக வேட்பாளர் மண்டை உடைந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு மீது தேமுதிகவினர் கல் வீசித் தாக்கினர். அதை தடுக்க முயன்ற திமுக வேட்பாளரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

திருக்கோவிலூர் தொகுதியில் வடிவேலு பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் சரமாரியாக செருப்பு மற்றும் கற்களை வீசியது. அதைத் தடுத்த திமுக வேட்பாளர் தங்கம் மீது கல் விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. அவருக்கு ரத்தம் கொட்டியது.

இதையடுத்கு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Buy cheap Doxycycline style=”text-align: justify;”>இதுகுறித்து வேட்பாளர் தங்கம் கூறுகையில், பிரச்சார வேன் மீது திடீரென கல் வீசப்பட்டது. தொடர்ந்து கல் வீசப்பட்டதால் வடிவேலுவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவரை மறைத்து நின்றேன். அப்போது என் தலையில் மீது கல் பட்டுவிட்டது. இதை செய்தது தேமுதிகவினர்தான்.

தண்டாச்சிபுரம் என்ற இடத்தில் டீ கடை வைத்துள்ள தேமுதிகவைச் சேர்ந்த அடியாட்கள் 10 பேர் ஒன்றாக கூடிக்கொண்டு கல் மற்றும் செருப்புகளை வீசினார்கள் என்றார்.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், இதற்கு எல்லாம் பயந்து நான் பிரச்சாரத்தை நிறுத்தப் போவதில்லை. தோல்வி பயம் காரணமாக எதிரணியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வீசப்படும் என்று போனில் மிரட்டினார்கள். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு. போலீசார் மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர் என்றார்.

Add Comment