முத்துச்சாமியுடன் திமுகவில் இணையும் 13 மாஜி அதிமுக எம்.எல்.ஏக்கள்!!

சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் 13 எம்.எல்.ஏக்கள் இன்று திமுகவில் இணைகின்றனர்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முத்துச்சாமி சமீபத்தில் அக்கட்சியிலிருந்து தூக்கப்பட்டார். இதையடுத்து அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இருப்பினும் இன்று முறைப்படி தனது ஆதரவாளர் பட்டாளத்தோடு திமுகவில் இணைகிறார் முத்துச்சாமி. Buy cheap Doxycycline முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் விழாவில் 30 ஆயிரம் பேர் திமுகவில் இணைவதாக முத்துச்சாமி கூறியுள்ளார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 13 பேரும் திமுகவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திமுகவில் சேரும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் பர்கூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்.

இவர் திமுகவில் இணைவது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,

1989 ம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டேன். அதில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு பணியாற்றினேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சனிக்கிழமை 500 பேருடன் திமுகவில் இணைகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஜானகி அணியைச் சேர்ந்தவர்களைத்தான் ஜெயலலிதா புறக்கணிப்பதாக அதிமுகவில் குமுறல் இருந்து வந்தது. ஆனால் அதிமுக உடைந்து, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தீவிர ஆதரவாரும் திமுகவுக்குத் தாவுவது அதிமுக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது

Add Comment