இன்று முதல் பிரான்சில் பர்தா அணியத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை

முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிய பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடைவிதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து முன்பு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி கூறியதாவது,

இது இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையல்ல. பர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத் தனத்தின் அடையாளம். அதை பிரெஞ்சு குடியரசில் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பர்தாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஜாக்கியுஸ் மியார்ட் கூறுகையில், பர்தா என்பது பிரெஞ்சு கலாச்சாரத்திற்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்று. முகம் என்பது கண்ணியமானதாகும். அது உங்களின் பாஸ்போர்ட் என்றார்.
Read: In English
இன்று முதல் பெண்கள் பர்தாவுடன் பிடிபட்டால் முதல் எச்சரிக்கப்படுவர், பின்னர் ரூ. 9 ஆயிரத்து 520 அபராதம் விதிக்கப்படும். பெண்களை பர்தா அணியுமாறு கணவரோ அல்லது மதத் தலைவரோ வற்புறுத்தினால் அவர்களுக்கு ரூ. 19 லட்சத்து 4 ஆயிரத்து 159 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த புதிய சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமையன்று Buy Cialis Online No Prescription பாரீஸில் போராட்டம் நடத்திய 19 பர்தா அணிந்த பெண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

Add Comment