ஓட்டுப்போடுவதற்கு முன் சில வார்த்தைகள்…

முஸ்லிம்களின் நண்பன் என்று காலம் முழுக்க சொல்லிக்கொண்டே இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசும் கொண்டுவரத்துணியாத கட்டாய திருமண பதிவு சட்டத்தை சப்தமில்லாமல் கொண்டு வந்த கருணாநிதியைவிட முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த சட்டம் பாசிச BJP கட்சியினர் வெகு காலமாக கொண்டுவரத்துடிக்கும் ‘பொது சிவில் சட்டத்தின்’ ஒரு முன்னோட்டம்தான்.

ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களிடம் பசப்புவார்த்தைகளை மழையாகப்பொழிந்து. அவர்களை ஏமாற்றுவதில் கருணாநிதிக்கு நிகர் அவர்தான். இதற்கு துணை புரிவதில் முஸ்லிம் லீக் கட்சியின் பங்கு மகத்தானது. கேவலமானது.

அக்கட்சியிலுள்ள சகோதரர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்வோம். இம்மையின் அற்பமான வாழ்வுக்காக (இந்த ஒப்புயர்வற்ற இஸ்லாமிய சமூகத்தை அடகு வைத்து) அற்புதமான மறுமை வாழ்வை நாசப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
மற்ற சகோதர இயக்கங்கள் கஷ்டப்பட்டு போராட்டங்கள் நடத்தி அதன் பலன் கிட்டும் நேரத்தில் கடைசியாக உள்ளே நுழைந்து ஏதோ தங்களால்தான் அது நிறைவேறியது என்பதுபோன்ற அரசியல் சித்துவிளையாட்டெல்லாம் உண்மையான முஸ்லிம்களுக்கு விளங்காததல்ல. வெறுமனே நாகரிகமான கட்சி என்று சொல்லிக்கொண்டால் போதாது. அந்த நாகரிகம் துளியளவாவது நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இம்மாத (ஏப்ரல் 2011) ”முஸ்லிம் முரசு” இதழில் வெளியான வாசக நேயர் ஒருவரின் கருத்து இதோ:
”காயிதே மில்லத் காலதில் 10 எம்.எல்.ஏ. சீட், 5 எம்.பி. சீட் கிடைத்தது ஜொலிப்பாக மரியாதையாக இருந்தது. சுயநலத்திற்காக கம்பெனிகள் ஆரம்பித்தார்கள். அதன் தகுதி, பயன் ந்ம் மரியாதை சுக்கு நூறாகக் கிழிந்து விட்டது. சமுதாயம் மிக் மிகக் கேவலம். காயிதே மில்லத், தளபதி, சிராஜுல் மில்லத், ரிஃபாயி, பக்கர் அண்ணன், ஷரீஃப் போன்றவர்களுடன் பழகிய என்னைப்போன்றவர்கள் உயிரிழந்த உடலாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…. சங்கு மார்க் – பூட்டு மார்க் – தூண்டில் முள் – எல்.கே.எஸ். – ஃபாத்திமா ஜுவல்லர்ஸ் – செந்தூர் மினரல் வாட்டெர் கம்பெனிகள் போன்று நடத்த ஒரு கட்சி, பேனர், தனித்தனி குரல்கள். இதெல்லாம் யாருக்காக, முஸ்லிம்களே சிந்திப்பீர்.” – ஹாஜி எம்.என். முஹம்மது பக்ரீன், காயல்பட்டினம்.

ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கம் என்பதுபோல் வெளி உலகிற்கு ‘ஷோ’ காண்பித்துக்கொண்டு சட்ட அல்லது பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக கையெழுத்திட இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்ததது? இந்த அங்கீகாரத்தை முஸ்லிம் சமூகம் இவர்களுக்கு எப்படி வழங்க முடியும்? அக்கட்சியின் பெயரிலுள்ள (முஸ்லிம் லீக் எனும் பெயரிலுள்ள) ‘முஸ்லிம்’ எனும் சொல்லை அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏன் இதுவரை தடை கோரவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமே!

பலரை சில நாள் ஏமாற்றலாம், சிலரை பல நாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது.

கோவை குண்டுவெடிப்புக்குப்பின்னர் தமிழக முஸ்லிம்கள் பட்ட துன்பங்கள் போல் இதுவரை எப்போதும் இந்த சமூகம் பட்டதில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி அரசின் சுயநல கண்ணோட்டமே. பாசிச பி.ஜே.பி.யுடன் சேர்ந்து கொண்டு அது முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட அந்த கால கட்டத்தை எந்த முஸ்லிமாவது மறக்கமுடியுமா? மறுக்கமுடியுமா? முனாஃபிக்குகளைத்தவிர!

சென்னையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டுக்கதவையும் காவலதிகாரிகளைக்கொண்டு தட்டி விசாரணை எனும் பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்தியது முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லிக்கொண்ட கருணாநிதியின் அரசுதானே!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதானவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் இந்த திமுக அரசு முஸ்லிம் சமுதாயத்திடம் தவறான கைதுகளுக்கு வருத்தமாவது தெறிவித்ததா?

பாப்ரி மஸ்ஜிதின் இடிப்பு – கரசேவைக்கு ஆள் அனுப்பினார் ஜெயலலிதா என்று கூக்குறலிடுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்; ‘கஃபத்துல்லாஹ்வைவிட ஒரு முஃமினின் உயிர், மானம், மரியாதை உயர்வானது’ என்பது நபிமொழி.
இன்றைக்கும் முஸ்லிம்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மஸ்ஜிதுகள் கட்டிக்கொள்ள இந்த முஸ்லிம் நண்பனின் அரசு அனுமதியளிக்கிறதா? இம்முறை ஒரு தேர்தல் கூட்டத்தில் கருணாநிதி பேசும்பொழுது கிராமப்புறங்களில் ஹிந்துக்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்திலோ அல்லது புறம்போக்கு இடத்தித்திலோ அவர்களுக்கான வழிபாட்டுத்தளங்களை அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடம் சொல்லி கட்டிக்கொள்வதைப்போல முஸ்லிம்களும் கிராமங்களில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறுகிறார். பலமுறை அதே முஸ்லிம்களின் ஓட்டைப்பெற்று பலமுறை முதல்வராக சகல அதிகாரமும் பெற்று ஆட்சி புறிந்தவரின் இப்போதைய வாக்குறுதி!

இத்தனைக் காலமாக முஸ்லிம்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தங்களுடைய வழிபாட்டுத்தளங்களை அமைத்துக்கொள்ளும் உரிமை இவரால் மறுக்கப்பட்டு வந்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறதல்லவா?
ஜெயலலிதா முஸ்லிம்களின் நண்பியல்ல என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் அவரால் பட்ட தொல்லைகளைவிட நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் முஸ்லிம்கள் பட்ட தொல்லைகள்தான் அதிகம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவையெல்லாம் நமது சமூகத்தின் தனிப்பட்ட பிரச்சனைகள். முஸ்லிம்களாகிய நாம் வாழுகிற பூமியும் சிறப்பிற்குறியதாக அமைய வேண்டும் என்று எண்ணுவது செயல்படுவது மிகவும் அவசியம். இந்த அரசின் சமூக அக்கறைக்கு மோசமான எடுத்துக்காட்டுகளை பட்டியலிட்டால் தமிழக பூமியே போதாது.

”குடி குடியைக்கெடுக்கும்” என்று சொல்லிக்கொண்டெ குடியை பரவலாக்கியதில் பெரும் பங்கு வகிப்பது தி.மு.க. அரசு என்று சொன்னால் மிகையாகாது. போதாததற்கு சமூகச்சீர்கேட்டை துரிதப்படுதுவதில் இவர்கள் காட்டும் ஆர்வம் இருக்கிறதே! வெள்ளைக்காரன் கெட்டான்.

குடியைப்பரவலாக்கிக் கொழித்தவர்கள் விபச்சாரத்தை மறைமுகமாக ஊக்கிவித்துவரும் பாங்கே தனி!
இவர்களைச்சார்ந்த தொலைக்காட்சி சேனல்கள்தான் நடனம் என்கின்ற பெயரில் மகா மோசமான வக்கிற உண்ர்வுகளை சிறார்களிடம் கொண்டு போய் சேர்த்தது. பிஞ்சு உள்ளங்களின் நற்குணங்களை குழிதோண்டிப்புத்தைத்து அவர்களின் எதிகாலத்தை பாழடிப்பதில் எந்த அரசும் இதுவரை இந்த அளவுக்கு ஆர்வம் காட்டியதில்லை. இவையத்தனைக்கும் என்ன காரணம்? சிந்தியுங்கள். இவர்களின் சுயநலம் மட்டும் தான் பதிலாகக் கிடைக்கும். –

மறக்க முடியுமா – ஆனந்த விகடன் தலையங்கம்

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!

தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் ‘செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.

ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் – நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்… இதோடு, சொல்லில் அஞ்சாமை!

ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது. ‘கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், ‘சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?’ என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது. இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி… தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது… இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை. நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!

ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, ‘வீழ்வது தமிழனாக இருப்பினும்… Buy Viagra Online No Prescription வாழ்வது நாமாக இருக்கட்டும்!’ என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி… அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா? வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது… ‘தகத்தகாய கதிரவன்’ எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி… குடும்பப் பாசத்தோடு சேர்ந்து ‘வேறு’ சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, ‘இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை’ என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு. ‘பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்’ என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! ‘மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்’ என்று சொல்லி… அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது… விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, ‘வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி’ என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு – கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி ‘சாதனை’!

உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை… ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

‘உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி. வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல… பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?
மறக்க முடியுமா –

Add Comment