துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார்.

கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம். கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும். கட்டுரைகளை ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் atmuae@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது 04 3908737 என்ற தொலைநகலுக்கோ அனுப்பலாம்.

மேலதிக விபரங்களுக்கு 050 344 53 75 எனும் அலைபேசி எண்ணில் Buy Levitra தொடர்பு கொள்ளலாம்.

Add Comment