கேரளாவில் நாளை தேர்தல் பலபரீட்சை:வளர்ச்சி பணிக்கே முக்கியத்துவம்

கேரள சட்டசபைக்கான தேர்தல் களம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாறும் என்ற கருத்து, கேரள மக்களிடையே எழுந்துள்ளது.கேரளாவில், 140 சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உள்ளது. 87 வயது முதல்வர் அச்சுதானந்தன் மீண்டும் களத்தில் இருக்கிறார். என்ன தான் ஊழலுக்கு எதிராக இவர் நடவடிக்கைகள் எடுத்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிக்கு என்ன செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரள மக்கள் எப்போதும், வளர்ச்சிப் பணியை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இதுவரை ஓட்டளித்து வந்துள்ளனர். அதேபோல் தான், இம்முறையும் கேரள மக்கள் ஓட்டளிப்பர் என்ற கருத்து உள்ளது.
முக்கிய பிரதான கூட்டணிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி களத்தில் நிற்கின்றன. நாளை நடைபெறும் தேர்தலில், 1.9 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 2.2 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க no prescription online pharmacy உள்ளனர். 971 வேட்பாளர்களில், 78 பேர் பெண்கள். மாநிலம் முழுவதும் 20,758 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 84 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சி 27 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் 84 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 24 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (மணி) 15 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன.

Add Comment