இந்தோனேசியாவில் 157 வயது பெண்?

தனக்கு 157 வயதாகிறது என உரிமை கோரியுள்ள பெண்மணியொருவரால் இந்தோனேசிய குடிசன மதிப்பீட்டு அதிகாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசிய தென் சுமாத்ராவில் 1853 ஆம் ஆண்டு பிறந்ததாகக் கூறும் துனாஹ் என்ற அப்பெண்ணின் வளர்ப்பு மகளுக்கு வயது 108 ஆக உள்ள நிலையில், அப்பெண் கூறுவதை சந்தேகிக்க முடியாதுள்ளதாக இந்தோனேசிய புள்ளிவிபர பணிமனையைச் சேர்ந்த ஜோன்னி சார்ட் ஜோனோ தெரிவித்தார்.

online pharmacy no prescription justify;”>எனினும், அவரது நினைவாற்றல் துல்லியமாகவும், பார்வை ஆற்றல் தெளிவாகவும் உள்ள அதே சமயம் அவரது கேட்கும் புலனும் பாதிப்பின்றி உள்ளமை காரணமாக அவரது வயது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் துனாஹ், டச் மொழியை சரளமாக உரையாடும் வல்லமையைக் கொண்டுள்ளார். 1945 ஆம் ஆண்டு வரை பல நூற்றாண்டுகள் காலம் இந்தோனேசியா டச் காலனித்துவ நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1965 ஆம் ஆண்டு பொதுவுடைமை புரட்சியொன்றுடன் தொடர்புபட்டிருந்தமை தனது ஆளடையாளத்தை மறைக்கும் வகையில் தனது பிறப்பு பற்றிய அனைத்து ஆவணங்களையும் துனாஹ் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

உலகின் நான்காவது சனத் தொகை கூடிய நாடாக விளங்கும் இந்தோனேசியாவின் சனத்தொகை 240 மில்லியனாகும்.

உலகில் 120 வயதைத் தாண்டி உயிர் வாழ்ந்த ஒரேயொரு நபராக பிரான்ஸ் பெண்மணியான ஜீன் கல் மென்ட் விளங்கினார். அவர் 1997 ஆம் ஆண்டு தனது 122 ஆவது வயதில் மரணமானார்.

Add Comment