பாளையங்கோட்டை பணிகள் தொடர ஆதரியுங்கள்…

விடுபட்ட பணிகளைத் தொடரவும், புதிய திட்டங்களை நிறைவேற்றவும் மீண்டும் மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் கேட்டுக் கொண்டார்.  அவர் தனது தேர்தல் பிரசாரத்தை மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நிறைவு செய்து பேசியதாவது:

 

இத் தொகுதியில் ரூ. 25 கோடி செலவில் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.  விளையாட்டுத் துறைக்கு ஏராளமான பணிகளைச் செய்துள்ளேன். ரூ. 5 கோடியில் அண்ணா விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.10 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலப்பாளையத்தில் ரூ. 60 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புதிய குடிநீர்த் திட்டம்

 

ரூ. 3 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்றுள்ளன.

 

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் கொண்டுவர புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 48 கி.மீ. தொலைவுள்ள பாளையங்கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி சீரமைக்க ரூ. 48 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இத் தொகுதியில் மனசாட்சியுடன் பணியாற்றி இருக்கிறேன். திமுக ஆட்சி அமைந்ததும், விடப்பட்ட பணிகளைத் தொடருவேன். புதிய திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார் அவர்.

 

கூட்டத்தில் மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ்.மைதீன், பகுதிச் செயலர்கள் சாகுல் அமீது, பாபுராஜ், முன்னாள் பொதுச் செயலர் அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து buy Doxycycline online கொண்டனர்.

 

Add Comment