இதயத்தில் இருக்கிறது இலவச மின்சாரம் !

பெற்றவளின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது.நம் இதயம் நாள் ஒன்றுக்கு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் அணைபோடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதயம் சுயேட்சையாக துடிப்பது இல்லை, அது துடிக்கவும் இயங்கவும் ஓர் உந்துதல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது அதோகதிதான். மின்சாரம் உற்பத்திச் செய்யும் நிலையம் இதயத்தின் மேல் வலது பக்கமிருக்கும் ஒரு சிறு அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த ‘சைனஸ் நோட்’டை நமது ஜெனரேட்டராகும். இதனை ஆற்காட்டாரின் இயங்கு விதிப்படி கீழ் இயங்கவைத்தால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்கு இதயத்தின் பல பகுதிகளில் இருந்தும் மின்சாரம் கிடைக்கும். இதனால் திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரித்து, கூடுதல் மின்சாரம் பாய்ந்து மரணம் கதவைத் தட்டவும் வாய்ப்பு உண்டு!
”இதயம் என்பது மின் உற்பத்தி மூலமும், ரத்தக் குழாய்களில் ஊட்டச் சத்துகள் இதயத் தசைக்குக் கொண்டுசெல்லப்படுவதன் மூலமும் இயங்குகிறது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படும்போது, ஊட்டச் சத்து கொண்டுசெல்லப்படுவது பாதிக்கப்பட்டு, இதயம் செயல் இழக்கிறது. இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதும், மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரச்னைக்கு ஆளானாலும், இதுபற்றி போதிய விழிப்பு உணர்வு இன்னமும் ஏற்படவில்லை.
மேலேச் சொன்ன சைனஸ் நோட் எப்போதும் ஒரே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்பது Levitra No Prescription மருத்துவர்களின் கருத்து. மனித உடலின் உழைப்பு அசைவுகளுக்கு ஏற்ப உற்பத்தி மாறுபடும். அதாவது தூங்கும்போது குறைவாகவும், ஓடுதல், மாடிப் படி ஏறுதல், பயம் ஏற்படும்போது என சமயங்களில் அதிகமாகவும் உற்பத்தியாகி இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்கிறது.
இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்​மியா எனப்படுகிறது, இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா எனப்படுகிறது. இதயத்தின் எந்த ஒரு திசுவில் இருந்தும் தேவை இல்லாமல் மின்சாரம் வெளியாகத் தொடங்கிவிடுவது. உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், திடீர் படபடப்பு, வியத்துக்கொட்டுதல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதயக் கீழ் அறைகளில் மின் உற்பத்தி ஏற்படுமானால், உயிருக்கு ஆபத்து நேரிடும்.
இந்த பிரச்சினை கருவில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய வால்வு பிரச்னை, தைராய்டு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கும், புகையிலை, மதுப் பழக்கம் உள்ளவர்​களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை ஈ.சி.ஜி. எடுப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இதில் தெரியவில்லை என்றால், எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மூலம் கண்டறியலாம்.
தேவை இல்லாத மின் சக்தி எங்கு உற்பத்தியாகிறது என்பதைக் தேடிக் கண்டறிந்து, அதனை மருத்துவர்கள் அழிப்பதன் மூலம் கூடுதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்படுகிறது (இந்த மருத்துவ தொழில் நுட்பத்தைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்).
இப்போ சொல்லுங்க மின்சாரம் ஏன் தடைபடுகிறது ? ஒரு வேளை மின்சாரம் தயாரிக்கும் ஜெனெரேட்டரோடு இதயங்கள் திருடப்படுவதலா ?
வாசித்ததும் நேசித்ததும் உங்களின் சுவாசத்தை சீராக்கத்தான் இப்பதிவு !

Add Comment