துபாயின் ‘புர்ஜ் கலிபா’வை விட இருமடங்கு உயரமான கட்டிடம் கட்ட திட்டம்.

தற்போது உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குரியது துபாய் நகரின் ‘புர்ஜ் கலிபா’. இந்த பெருமையை தட்டி செல்ல வருகிறது இன்னொரு புதிய கட்டிடம். ஒரு மைல் (1.6 கி.மீ) உயரத்தில் அமையவுள்ள இந்த புதிய கட்டிடத்தை சவுதி அரேபிய அரச குடும்பத்திற்கு சொந்தமான கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் கட்ட திட்டமிட்டுள்ளது. புர்ஜ் கலிபாவைவிட Cialis No Prescription இருமடங்கு உயரத்தில் இந்த கட்டிடம் செங்கடலின் துறைமுக நகரமான ஜடாவில் அமைய இருக்கிறது.

இந்திய மதிப்பில் சுமார் 90000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் உச்சியை லிப்டில் சென்றடைய 12 நிமிடங்களாகும். புர்ஜ் கலிபா கட்டிடத்தை வடிவமைத்த அதே கட்டிடக்கலை நிபுணர்களே இந்த கட்டிடத்தையும் வடிவமைக்க உள்ளனர். இதில் வர்த்தக நிறுவங்கள், ஆடம்பர குடியிருப்புக்கள், ஹோட்டல்கள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது.

Add Comment