தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி… கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்!

தேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துடன் சென்றனர்.

இந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.

சென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.

வாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.

“கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் Buy Levitra Online No Prescription போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்… மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்…”, என்றார் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த ஒரு வாக்காளர்.

பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்?!

Add Comment