மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள்-ரஜினி பரபரப்பு பேட்டி

சென்னை மக்கள் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ரஜினிகாந்த்தின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. இருப்பினும் அவர் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இருப்பினும் அவரை திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆசி பெற்றனர். அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் சந்தித்துப் பேசினார். அதேபோல பாஜக தலைவர் நிதின் கத்காரியும் போய்ப் பார்த்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, மக்கள் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்சினையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றார் ரஜினி.

buy Levitra online

Add Comment