அமெரிக்க உயர் பதவிக்கு சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் தேர்வு

இந்திய தொழில்நுட்ப மையத்தைச்(ஐ.ஐ.டி.,) சேர்ந்த முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ், அதிபர் ஒபாமாவால், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ்(53). இவர் கடந்த 1977ம் ஆண்டு பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். சென்னை ஐ.ஐ.டி., அலுமினி சங்கத்தின் உறுப்பினர். அமெரிக்க, “மசாசூசெட்ஸ்’ தொழில்நுட்ப மையத்தின்’ டீனாக பணியாற்றும் சுரேஷ், அதிபர் ஒபாமாவால், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையானது தனித்து செயல்படக் கூடியது. ஆரம்ப கட்ட ஆராய்ச்சி பணிகளுக்கு 20 சதவீத நிதி உதவி அளித்து வருகிறது. அமெரிக்க காங்கிரசால் 1950ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுப்ரா சுரேஷ், அமெரிக்க தேசிய இன்ஜினியரிங் அகடமி, இந்திய தேசிய இன்ஜினியரிங் அகடமி, அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகடமி, இந்திய அறிவியல் அகடமி(பெங்களூர்), தேசிய அறிவியல் அகடமி(ஜெர்மனி), ராயல் அறிவியல் அகடமி(ஸ்பெயின்) மற்றும் அறிவியல் அகடமி(இத்தாலி) ஆகியவற்றில் உயர் பொறுப்பில் ஏற்கனவே பணியாற்றிய Bactrim online அனுபவம் பெற்றவர்.

இதுகுறித்து அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்துறையில் நீண்ட நாள் அனுபவமும், நல்ல திறமையும் உள்ள சுப்ரா சுரேஷ், இப்பணியை ஏற்றுக் கொண்டது என்னை பெருமையடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று கூறினார்.

Add Comment