மீண்டும் அதிமுக.,ஆட்சி அமையும் : செந்தூர்பாண்டியன் உறுதி

“தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்’ என அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தூர்பாண்டியன் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது ஓட்டினை பதிவு செய்தார். பின்னர் தொகுதியில் உள்ள பூத்துகளை பார்வையிட வந்த செந்தூர்பாண்டியன் கடையநல்லூரில் கூறியதாவது:- “”தேர்தலை முன்னிட்டு அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம், கூட்டமாக ஆண்களும், பெண்களும் பூத்துகளுக்கு வந்து ஓட்டு போட வருவதை பார்க்கும்போது அவர்களின் ஓட்டுரிமை பதிவாகியிருப்பது மிகுந்த பெருமைக்குரியதாகும். ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமையை பயன்படுத்துவது வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அதன்படி கடையநல்லூர் தொகுதியில் புதிய வாக்காளர்கள் buy Lasix online அதிகளவில் ஓட்டுகளை பதிவு செய்தனர். தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என நம்புகிறோம். கடந்த 5 ஆண்டு கால வேதனையான ஆட்சிக்கு இந்த சட்டசபை தேர்தல் நிச்சயமாக ஒரு முடிவினை கொடுக்கும். அந்த முடிவு அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். வேட்பாளருடன் வக்கீல் அய்யப்பராஜா, குருசாமி, தொகுதி செயலாளர் மாரியப்பன், குட்டியப்பா உடன் சென்றனர்.

Add Comment