திமுக.,ஆட்சி நிச்சயம் அமையும் : பீட்டர் அல்போன்ஸ் நம்பிக்கை

“தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயமாக அமையும்’ Cialis online என கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதி காங்.,வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி எஸ்.டி.ஏ.மெட்ரிக் பள்ளியில் நேற்று காலை தனது ஓட்டினை பதிவு செய்துவிட்டு கடையநல்லூர் தொகுதியில் உள்ள பூத்துகளை பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:- “”தேர்தல் கமிஷன் அறிவுரைபடி தமிழக சட்டசபை தேர்தல் காலை 8 மணிக்கு துவங்கியது. ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாக்காளர்கள் பூத்துகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். அலை, அலையாக வாக்காளர்கள் வருவதை பார்க்கும் போது கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட சாதனை திட்டங்களுக்கு பலன் கிடைத்துள்ளதை பெருமையாக காண முடிந்தது. ஜனநாயகத்தின் ஓட்டுரிமையை மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்ய வந்திருப்பதை காண்பது பாராட்டுக்குரியதாகும். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயமாக அமையும்” என்றார். வேட்பாளருடன் வக்கீல்கள் குமரேஸ், செந்தூர்பாண்டி, சென்னை வினோத், இளைஞர் காங்., கதிரவன் ஆகியோர் உடன் வந்தனர்.

Add Comment